T20 World Cup Final இந்தியா பாகிஸ்தான் மேட்சா இருந்தா வேற லெவலில் இருக்கும்: முஷ்டாக்

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என பாகிஸ்தானின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2021, 12:07 PM IST
T20 World Cup Final இந்தியா பாகிஸ்தான் மேட்சா இருந்தா வேற லெவலில் இருக்கும்: முஷ்டாக் title=

துபாய்: தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என பாகிஸ்தானின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஒரு அபார வெற்றியுடன் பாகிஸ்தான் (Pakistan) தன் உலகக் கோப்பையை தொடங்கியது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மீண்டும் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு முறையும் தோற்கடிக்கப்படாமல், இந்த உலகக் கோப்பையில் வலுவான இடத்தில் உள்ளது.

"உலக சாம்பியனாக வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் வரும்போது, ​​எதிராளியைப் பற்றி சிந்திக்க மாட்டீர்கள்" என்று சக்லைன் வியாழன் அன்று ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

"யார் எதிரில் இருந்தாலும், செய்ய வேண்டியதை, செய்ய விரும்புவதை அனைவரும் செய்வோம். எனவே, அடுத்தக் கட்டத்தில் எமக்கு எதிராக யார் இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வோம். உலக சாம்பியனாவதற்கு, நீங்கள் உங்களிடம் உள்ள எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ வேண்டும். கடினமாக இருப்பது, நன்கு தயாராக இருப்பது மற்றும் மற்றவர்களை விட வித்தியாசமாக கிரிக்கெட் விளையாடுவது ஆகிய பண்புகள் நீங்கள் ஒரு உண்மையான உலகக் கோப்பை வெற்றியாளர் என்பதை காட்டுகின்றன. உலக சாம்பியனாக வேண்டுமானால், பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் உலகம் உங்களை அங்கீகரிக்கும்."

“இந்தியாவும் (Team India) பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாடினால் அது மிக நல்ல விஷயமாக இருக்கும். ஒரு போட்டியில் அவர்களை தோற்கடித்ததால், எங்களுக்கு தலை கனம் வந்துவிட்டது என இதற்கு பொருள் அல்ல. பாகிஸ்தான் அணி இப்போது வலுவான அணியாக உள்ளது. மற்ற அணிகளும் இப்போது அவர்களை அப்படித்தான் கருதுகிறார்கள்.

ALSO READ: சூப்பர் 12: 9 போட்டிகளில் 8 முறை வென்ற சேஸிங் அணி! காரணம் என்ன? 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை எப்போதும் கடினமான கிரிக்கெட்டை விளையாடும் அணிகள். போட்டியின் முடிவுகள் நம் கையில் இல்லை. ஆனால், செயல்முறை, நாம் எப்படி திட்டமிடுகிறோம், நமது அர்ப்பணிப்பு, போராடுகிறோமா, பின்வாங்குகிறோமா, நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள், முடிவுகள் மற்றும் எதிராளியின் மீது கவனம் செலுத்துதல், இவை யாவும் நம் கையில் உள்ளன. இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, இந்தியா பாகிஸ்தான் இடையில் இறுதிப்போட்டி நடந்தால், அது ஐசிசிக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும், உலக கிரிக்கெட்டுக்கும் மிகவும் நல்லது. அனைவரும் அதை ரசிப்பார்கள். இந்தியா எங்கள் அண்டை நாடு. அவர்களுடன் மற்றொரு போட்டியில் விளையாடுவது எங்கள் உறவுகளை மேம்படுத்தும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"தோனி (Dhoni), விராட், பாபர், மாலிக், தஹானி, ரிஸ்வான், இமாத், ஹபீஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு, அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து பேசிக்கொண்டிருக்கும் படங்கள் உலகுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளன" என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கூறினார்.

பாகிஸ்தான் அடுத்ததாக வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அசோசியேட் அணிகளான நமீபியா மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டத்தில், அந்த அணி ஸ்காட்லாந்தை வென்று கணிசமான ரன் ரேட்டை கொண்டுள்ளது. புள்ளிகள் அட்டவணையில் பாகிஸ்தானுக்கு கீழ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ALSO READ:இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்தவர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகிறார்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News