WI vs IND: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்... இந்திய இளம் படைக்கு பின்னடைவு!

West Indies vs India T20 Series: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள் அணிகள் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2023, 09:14 AM IST
  • கிங் 85 ரன்களை எடுத்து அசத்தினார்.
  • பூரன் தொடர் நாயகனாக தேர்வானார்.
  • கிங் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
WI vs IND: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்... இந்திய இளம் படைக்கு பின்னடைவு! title=

West Indies vs India T20 Series: மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடைபெற்றது. டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளை மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற்றது. இருப்பினும், அடுத்த இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று அசத்தியது.

இதனால், 2-2 என்ற கணக்கில் தொடர் சமனடைந்ததால், 5ஆவது டி20 போட்டி டிசைடராக மாறியது. இந்திய நேரப்படி ஆக. 13ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நான்காவது டி20 போட்டியும் இதே மைதானத்தில் நடந்த நிலையில், இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்திருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்யாமல், பேட்டிங்கை தேர்வு செய்தது சற்று ஆச்சரியத்தை அளித்தது. 

அதன்படியே, நான்காவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய கில் - ஜெய்ஸ்வால் ஜோடி இந்த போட்டியில் முதலிரண்டு ஓவர்களிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது. அடுத்து வந்த சூர்யகுமாருடன், திலக் வர்மா ஒரு சுமாரான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். திலக் வர்மா 27 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்க இந்தியா சற்று தடுமாறியது.

மேலும் படிக்க | ஷிகர் தவான் முதல் புவனேஷ்வர் குமார் வரை: இனி இந்திய அணியில் பார்க்க முடியாமல் போகும் 5 வீரர்கள்

சூர்யகுமார் மட்டும் ஒருபக்கம் பவுண்டரிகளை அடித்து வந்தார். பாண்டியாவும் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. மேலும், இரண்டு முறை போட்டி சிறு மழையால் தடைப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது. 20 ஓவர்களில் 165 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 61 ரன்களை எடுத்தார். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் ரொமாரியோ ஷெப்பர்டு 4, ஹோல்டர், ஹோசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

மேலும் படிக்க | ப்ளூ டிக்கை பறிகொடுத்த பிசிசிஐ... அதுவும் இதற்காகவா - முழு விவரம்

தொடர்ந்து, விளையாடிய மே.இ. தீவுகள் அணிக்கு பிரண்டன் கிங், மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். மேயர்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கிங் - பூரன் ஜோடி இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பறித்தது. இந்த ஜோடி 107 ரன்களை குவித்த நிலையில், பூரன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இடையில் மழையும் குறுக்கிட்டது. சற்று நேரம் கழித்து ஆட்டம் தொடங்கிய நிலையில், ஹோப், கிங் உடன் கூட்டணி அமைத்து மே.இ. தீவுகளை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 

இந்திய அணியில் வழக்கமான பந்துவீச்சாளர்களுடன் ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோரும் பந்துவீசினர். 18 ஓவர்களிலேயே மே. இ. தீவுகள் இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 

டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கிங்கும், தொடர் நாயகனாக பூரனும் தேர்வானார்கள். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News