கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து அணியை மாற்ற வேண்டும் என்று குரல்கள் வர தொடங்கின. ஹர்திக் பாண்டியா பவுலிங் போடுவதை நிறுத்தி உள்ளதால் அவருக்கு பதிலாக வேறொருவரை அணியில் எடுக்கும் படி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் மந்திரமான வெற்றியோ தோல்வியோ அதே அணியுடன் விளையாடும் யுத்தியை இந்திய அணியிலும் செயல் படுத்த போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியிலும் கடைசிவரை அணியை மாற்றாமல் கோப்பையை வெற்றி பெற செய்தார் தோனி. நாளை நடைபெற உள்ள போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒரு போட்டியாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் அரைஇறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். நியூஸிலாந்து அணியும் அதே நிலையில் தான் நாளைய போட்டியை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளுமே பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் சர்தல் தாகூரை 7வது பேட்ஸ்மேனாக களம் இறக்க இந்திய அணியில் யாருக்கும் விருப்பம் இல்லை என்றே தகவல்கள் வருகிறது. இதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியவை பவுலிங் பயிற்சியில் அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர் இந்திய அணியின் பயிற்சியாளர்கள்.
LOADING@hardikpandya7 | #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/hlwtrGDfNR
— BCCI (@BCCI) October 28, 2021
மேலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர்குமாரின் பங்கு தேவைபடுகிறது. கோலி தேவைப்பட்டால் அஸ்வின்னை அணியில் எடுக்க வாய்ப்பு உள்ளது எனவும், இல்லையெனில் வருண் சக்கரவர்த்தியை ஆட வைப்பார் என்று கூறப்படுகிறது. நாளை மாலை 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோத உள்ளன.