புளோரிடாவில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி உலகின் நம்பர் 1 அணியான இந்தியா தொடரை கைப்பற்றி 3-1 என முன்னிலை பெற்றது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) ஆல்ரவுண்ட் ஷோ மூலம் மென் இன் ப்ளூ அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீசை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்தாவது டி20 தொடரை இந்தியா தற்போது பதிவு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ச்சியான 13 வது தொடர் வெற்றி இது ஆகும்.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். முன்னதாக, டாஸ் வென்ற விண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்தில் 33 ரன்களுடன், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களுடன் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். கிட்டத்தட்ட பவர்பிளேயில் இந்திய அணி 60 ரன்களுக்கு மேல் அடித்தது. ரிஷப் பந்த் 31 பந்தில் 6 பவுண்டரிகள் உட்பட 44 ரன்களுடன் அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தார். சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் தலா 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்தார். கடைசியாக அக்சர் படேல் சிக்ஸர் மழை பொழிந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
Innings Break!
A solid batting display from #TeamIndia to post 191/5 on the board.
Over to our bowlers now.
Scorecard https://t.co/DNIFgqfRJ5 #WIvIND pic.twitter.com/iOt9JTUg27
— BCCI (@BCCI) August 6, 2022
மேலும் படிக்க | அடித்தது ஜாக்பார்ட்! கேஎல் ராகுல் இடத்தில் ஹர்திக் பாண்டியா?
மேற்கிந்திய தீவுகள் அணி சேஸிங்கை நன்றாகத் தொடங்கியது, ஆனால் இன்னிங்ஸின் 2வது ஓவரில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணியின் பவுலிங் மிரட்டலில் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தது விக்கெட்களை பறிகொடுத்தது. 19.1 ஓவரில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் ஆட்டமிழந்தது மேற்கிந்திய தீவுகள். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவேஷ் கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இன்று அதே மைதானத்தில் தொடரின் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. 4-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல இந்தியா தயாராக உள்ளது.
மேலும் படிக்க | இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! வெளியேறும் ஐபிஎல் கேப்டன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ