IND vs SL: கிரிக்கெட் போட்டி, இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

இந்தியா-இலங்கை மோதும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2021, 03:48 PM IST
IND vs SL: கிரிக்கெட் போட்டி, இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் title=

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

ஜூலை 13 முதல் தொடங்கி 25 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளது. அந்தவகையில் இந்தத்தொடரில் (India vs Sri Lanka) விளையாடப்போகும் வீரரகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணியின் கேபடன் விராட் கோலியும், துணைக்கேப்டன் ரோகித் ஷர்மாவும் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் இருப்பதால் இந்த போட்டியில் விளையாட வில்லை. 

ALSO READ | 2007 T20 World Cup: நான் கேப்டனாவேன் என எதிர்பார்த்தேன்-யுவராஜின் பெரிய வெளிப்பாடு

இந்நிலையில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தொடரில் இந்திய அணியின் ஷிகர் தவான் (Shikhar Dhawan) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்
1. ஷிகர் தவான் (கேப்டன்)
2. புவனேஷ்வர் குமார் (துணைக் கேப்டன்)
3. பிரித்வி ஷா
4. தேவ்தத் படிக்கல் 
5. ஆர். கெய்க்வாட்
6. சூர்யகுமார் யாதவ்
7. மணிஷ் பாண்டே
8. நிதிஷ் ராணா
9. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
10. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
11. சாஹல்
12. ராகுல் சாஹர்
13. கே. கவுதம்
14. குருணால் பாண்ட்யா
15, குல்தீப் யாதவ்
16. வருண் சக்ரவர்த்தி
17. தீபக் சாஹர்
18. நவ்தீப் சைனி
19. சி. சகாரியா.

வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள் 
1. இஷான் பெரேல்
2. சந்தீப் வாரியர்
3. அர்ஷ்தீப் சிங்
4. சாய் கிஷோர்
5. சிமர்ஜீத் சிங்.

ALSO READ | IPL 2021 அட்டவணையை BCCI வெளியீடு, இந்த தேதியில் இறுதி போட்டி நடைபெறும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News