பெங்களூரு: இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டெஸ்டில் இந்தியா 71.0 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் லியோன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது. வார்னர் 23, ரென்ஷா 15 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்துள்ளது. மேத்யூ வேடு 25 ரன், மிட்செல் ஸ்டார்க் 14 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளன இன்று ஆஸ்திரேலியா அணி 22.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 87 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
Innings break! Australia all out for 276, lead India (189) by 87 runs #INDvAUS pic.twitter.com/ea8Cvs6B5V
— BCCI (@BCCI) March 6, 2017