3-வது டி20 போட்டி: மோசமான வானிலை டாஸ் தாமதம்

Last Updated : Oct 13, 2017, 06:56 PM IST
3-வது டி20 போட்டி: மோசமான வானிலை டாஸ் தாமதம் title=

இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவது தாமதமானது

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முன்னதாக 4-1 என்ற கணக்கில், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. பின்னர் தெடங்கிய டி20 தெடரின் 3 போட்டிகளில் இரு அணியினரும் தலா 1 போட்டி வெற்றிப் பெற்று சம எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெரும் போட்டியானது, தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகும்.

எனவே இரு அணிகளுக்கும், இன்றைய போட்டி கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரலையாக பார்கலாம்.

Trending News