World Cup 2023: உலக கோப்பை அணியில் அஸ்வின்? சூசகமாக சொன்ன ரோஹித்!

World Cup 2023 Squad: இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஆர் அஸ்வின் இந்திய உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படலாம் என்ற நம்பிக்கையான செய்தியை கூறி உள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Sep 18, 2023, 09:40 AM IST
  • ஆசிய கோப்பையை வென்றது இந்தியா.
  • 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • அடுத்து ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுகிறது.
World Cup 2023: உலக கோப்பை அணியில் அஸ்வின்? சூசகமாக சொன்ன ரோஹித்! title=

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற 2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது இந்தியா. முகமது சிராஜின் அசாதாரண பந்து வீசியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு இலங்கையை சுருட்டியது, மேலும் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஷுப்மன் கில் (27*), இஷான் கிஷான் (23*) ஆகியோரின் ஆட்டத்தால் 6.1 ஓவர்களில் 51/0 என்ற வெற்றியை எட்டியது. கில் 6 ஆட்டங்களில் 302 ரன்களுடன் போட்டியின் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

மேலும்படிக்க | முகமது சிராஜ்: பிரேமதாசாவில் ராசாவாக ஜொலித்த சிராஜ் - விராட் கோலி ரியாக்ஷன்

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா மோதுகிறது. இந்தியா அணி தனது பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்ட்ரை உலக கோப்பை முடிவும் வரை மாற்றமால் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் பிரிவில் ரவீந்திர ஜடேஜாவுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார்.  ஜடேஜா அணியில் நிச்சயம் விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ராகுல் டிராவிட் மற்றும் அணி தேர்வாளர்கள் 3வது ஸ்பின்னராக யாரை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.  வாஷிங்டன் சுந்தர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடினார்.  அக்சர் படேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இடம்பெற்றார். ஆனால், பலரும் ரவிச்சந்திரன் அஸ்வினை அந்த இடத்தில் பயன்படுத்த விரும்புகின்றனர்.  ஆனால் அவர் ஆசிய கோப்பை அணி மற்றும் இந்தியாவின் உலகக் கோப்பை பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

சுழல் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், டீம் இந்தியா அணி பட்டியலை மாற்றியமைக்க முடியும், காலக்கெடு செப்டம்பர் 28 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, ரோஹித் அஷ்வின் மற்றும் சுந்தர் ஆகியோருக்கு ஒரு அறிக்கை மூலம் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை அளித்தார். இதற்கிடையில் அக்சரும் காயமடைந்துள்ளார். "ஸ்பின்னர்-ஆல்-ரவுண்டராக, அஷ்வின் அடுத்த தேர்வாக இருக்கிறார், நான் அவருடன் தொலைபேசியில் பேசுகிறேன். கடைசி நிமிடத்தில் அக்சருக்கு காயம் ஏற்பட்டது. ஆசிய கோப்பையில் வாஷிங்டன் விளையாடும் சூழல் ஏற்பட்டது" என்றார் ரோஹித்.

அஸ்வின் கடைசியாக இந்தியாவுக்காக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார். எனவே அவரை சேர்க்க ரோஹித் முடிவு எடுப்பாரா என்பது சுவாரஸ்யமாக இருக்கும். சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது உலகக் கோப்பை பிரச்சாரத்தைத் தொடங்குகிறது இந்தியா.

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது சிராஜ்,

மேலும்படிக்க | IND vs SL: கொழும்புவை தாக்கிய சிராஜ் புயல்... சின்னாபின்னமான இலங்கை அணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News