IPL 2024 RCB vs KKR News: 17ஆவது ஐபிஎல் சீசன் (Indian Premier League) கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் இதுவரை ஓரிரண்டு போட்டிகளை விளையாடிவிட்ட சூழலில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. இதுவரை 9 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அனைத்து போட்டிகளிலும் ஹோம் அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில், இன்று 10ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை - மும்பை, சென்னை - ஆர்சிபி, மும்பை - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்தளவிற்கு ஆர்சிபி - கொல்கத்தா (RCB vs KKR) அணிகளுக்கு இடையிலான போட்டியின் மீதும் கடும் எதிர்பார்ப்பு இருக்கும்.
கொல்கத்தாவின் ஆதிக்கம்
கௌதம் கம்பீர் - விராட் கோலி (Gautam Gambhir - Virat Kohli) ஆகியோருக்கு இடையிலான மோதலும் அதற்கு முக்கிய காரணம் என்றாலும், கொல்கத்தா அணி ஆர்சிபி மீது கடந்த காலங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இதுநாள் வரை ஆர்சிபியின் மோசமான ஸ்கோரான 49 ரன்களுக்கும் கொல்கத்தா தான் காரணம் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அந்த வகையில், இன்றைய போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு தொடரில் ஆர்சிபி முதல் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்தாலும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆறுதலான நிலையில் உள்ளது. சின்னசாமி மைதானத்தில் இன்று கொல்கத்தாவை வீழ்த்தும் முனைப்போடும் இருக்கிறது. இதுவரை 32 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடி உள்ள நிலையில், ஆர்சிபி 14 போட்டிகளையும், கேகேஆர் 18 போட்டிகளையும் வென்றுள்ளன. குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் 11 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடியிருக்கும் நிலையில், ஆர்சிபி 4 முறையும், கேகேஆர் 7 முறையும் வென்றிருப்பதன் மூலமே கொல்கத்தாவின் ஆதிக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடுயும்.
சுனில் நரைன் vs KGF
இது ஒருபுறம் இருக்க, கொல்கத்தாவின் முக்கிய சுழற்பந்துவீச்சாளரான சுனில் நரைன் (Sunil Narine) அந்த அணியின் வெற்றிக்கு இன்று துருப்பு சீட்டாக இருப்பார் எனலாம். குறிப்பாக, ஆர்சிபியின் KGF என்றழைக்கப்படும் நட்சத்திர பேட்டர்களான விராட் கோலி (Virat Kohli), கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகிய மூவருக்குமே சுனில் நரைன் பந்துவீச்சில் பல சறுக்கல்கள் உள்ளன.
சுனில் நரைனுக்கு எதிராக இவர்களின் புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தாலே அது புரிந்துவிடும் எனலாம். விராட் கோலி சுனில் நரைனுக்கு எதிராக 145 பந்துகளை சந்தித்து 141 ரன்களைதான் எடுத்திருக்கிறார், நான்கு முறையும் அவுட்டாகி உள்ளார். மேக்ஸ்வெல் (Glenn Maxwell) 86 பந்துகளை சந்தித்து 94 ரன்களை எடுத்து இரண்டு முறை ஆட்டமிழந்திருக்கிறார். ஃபாஃப் டூ பிளெசிஸ் 70 பந்துகளை சந்தித்து 54 ரன்களை மட்டுமே அடித்துள்ளார், இவரும் நான்கு முறை ஆட்டமிழந்திருக்கிறார்.
தாக்கப்போவது யார்?
சுனில் நரைனுக்கு எதிராக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 97.2, அதேபோல் மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக் ரேட் 109.3 ஆக உள்ளது. இதில் மிக மோசகமாக டூ பிளெசிஸ் (Faf Du Plessis) 77.1 ஸ்ட்ரைக் ரேட்தான் சுனில் நரைனுக்கு எதிராக வைத்திருக்கிறார். ஆர்சிபியின் முக்கிய பேட்டர்களான இவர்கள் சுனில் நரைனின் 4 ஓவர்களையும் எதிர்கொண்டு நிலைத்துநின்று விளையாடுவது சற்று கடினம்தான்.
குறிப்பாக, பவர்பிளே, மிடில், டெத் என அனைத்து கட்ட ஓவர்களிலும் சுனில் நரைன் மட்டுமின்றி கேகேஆர் அணியின் ஸ்பின்னர்களான வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். எனவே, இன்றைய போட்டியில் கேகேஆர் அணியின் சுழற்பந்துவீச்சு கூட்டணியை யார் எதிர்கொண்டு தாக்குவார்கள் என்பதை காண பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | மலிங்கா அப்செட்! சீனியர் பிளேயர்களை அசிங்கப்படுத்துவதே பாண்டியாவுக்கு வேலையா போச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ