ஐபிஎல்: கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் செயல்பாடு எப்படி இருந்தது? அவரின் சாதனை என்ன?

Mahendra Singh Dhoni in IPL: கேப்டன் பதவியில் இருந்து விலகிய மகேந்திர சிங் தோனியின் செயல்பாடு ஒரு கேப்டனாக எப்படி இருந்தது? எம்.எஸ். தோனியின் சாதனைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 22, 2024, 03:05 PM IST
ஐபிஎல்: கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் செயல்பாடு எப்படி இருந்தது? அவரின் சாதனை என்ன? title=

Indian Premier League, Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசன் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இதனையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இதுவரை சிஎஸ்கே அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடி வரும் கெய்க்வாட், ஐபிஎல் 2024 முதல் அணியை வழிநடத்துவார். அப்படிப்பட்ட நிலையில் தோனியின் கேப்டன்சியின் பொன்னான அத்தியாயம் முற்றிலுமாக நின்று போனது. வாருங்கள் கேப்டனாக எம்.எஸ். தோனியின் சாதனைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து பார்ப்போம்.

100 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே

எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் மொத்தம் 226 போட்டிகளுக்கு (சிஎஸ்கே மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்) கேப்டனாக இருந்துள்ளார். இவர் தலைமையில் சென்னை மற்றும் புனே இரண்டு அணிகள் செத்து 133 போட்டிகளில் வெற்றியும், 91 தோல்வியும் அடைந்துள்ளது. இதன் அடிப்படையில் கேப்டனாக அவரது வெற்றி சதவீதம் 58.84 ஆகும்.

ஐபிஎல்லில் 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே கேப்டன் இவர்தான். அவருக்குப் பிறகு, ரோஹித் ஷர்மா அதிக வெற்றி பெற்ற இரண்டாவது கேப்டடனாக உள்ளார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 87 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க - CSK vs RCB: ருதுராஜ் vs டூ பிளெசிஸ்... Dream 11 பிளேயிங் லெவன் கணிப்பு!

தோனியின் தலைமையில் சிஎஸ்கே 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஐபிஎல் பட்டங்களை (2010, 2011, 2018, 2021 மற்றும் 2023) வென்றுள்ளது. அதேபோல ரோஹித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை (2013, 2015, 2017, 2019 மற்றும் 2020) பட்டம் பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ரோஹித்தும் தோனியும் கூட்டாக பட்டங்களின் அடிப்படையில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள அவர்கள்ஆவார்கள். இதன் பிறகு கெளதம் கம்பீர் தலைமையில் இரண்டு முறை கேகேஆர் வெற்றி பெற்றது.

தோனியின் தலைமையில் 128 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

2008 முதல் 2023 வரையிலான ஐபிஎல் தொடரில் தோனி 212 போட்டிகளில் சிஎஸ்கே அணியை வழிநடத்தி உள்ளார். ஐபிஎல் 2022 தொடரின் போது, ​​அவர் 8 போட்டிகளில் கேப்டனாக இருந்தார், மீதமுள்ள போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றார். அவரது தலைமையில், சென்னை அணி 128 போட்டிகளில் வெற்றி பெற்றது (வெற்றி சதவீதம்-60.95) மற்றும் 82 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. 2 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

அதேபோல ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் (ஆர்பிஎஸ்) அணியின் கேப்டனாக தோனி 14 போட்டிகளில் அணியை வழிநடத்தி இருக்கிறார். அதில் புனே அணி 5 போட்டியில் வெற்றியும், 9 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது.

மேலும் படிக்க - Ruturaj Gaikwad : சிஎஸ்கே புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்... தோனி என்ன செய்யப்போகிறார்...?

கேப்டனாக தோனியின் செயல்பாடு எப்படி இருந்தது?

ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக தோனியின் செயல்பாடு சராசரி 39.82 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.46 ஆக உள்ளது. கேப்டனாக அவர் 4,660 ரன்கள் எடுத்துள்ளார். மிகவும் புகழ்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார்.

கேப்டனாக 218 சிக்ஸர்கள் அடித்த தோனியின் சாதனை, எந்த ஒரு வீரரும் செய்த சாதனையாகும். அதற்கு அடுத்த இடத்தில் கோஹ்லி 168 சிக்சர்களை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி (4,994) பெற்றுள்ளார். 

தோனியின் ஐபிஎல் பயணம்

தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 250 போட்டிகளில் விளையாடி 38.79 சராசரி மற்றும் 135.91 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5,082 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன் எடுத்தவர்களில் 7வது இடத்தில் உள்ளார். அவர் 349 பவுண்டரிகள் மற்றும் 239 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதுவரை கிறிஸ் கெய்ல், ரோஹித் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே 250 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க - ஐபிஎல் 2024 தொடரில் வரும் புதிய விதிமுறைகள்! 2 பவுன்சர்கள் வீசலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News