டென்னிஸ் பால் to ஐபிஎல் ஜாக்பாட்; பஞ்சாப் நரைனின் சுவாரஸ்ய பின்னணி

காலணி தைக்கும் தந்தை, வளையல் விற்கும் அம்மா என ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பஞ்சாப்பை சேர்ந்த ரமேஷ்குமார் ஐபிஎல் ஏலம் மூலம் ஒரே நாளில் லட்சாதிபதியாகியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2022, 05:08 PM IST
  • பஞ்சாப் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்
  • ஒரே இரவில் லட்சாதிபதியானார்
  • கேகேஆர் அணி ரமேஷ்குமாரை எடுத்தது ஏன்?
 டென்னிஸ் பால் to ஐபிஎல் ஜாக்பாட்; பஞ்சாப் நரைனின் சுவாரஸ்ய பின்னணி title=

முயற்சிகள் இருக்கும்போது அதிர்ஷ்டம் தானாக வரும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு ரமேஷ் குமார். பஞ்சாப் மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடுவதில் மிகவும் திறமையானவராக இருந்துள்ளார். பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலித்ததால், அந்த மாநிலத்தில் நடைபெறும் அனைத்து டென்னிஸ் பால் லீக்குகளிலும் ரமேஷ்குமார் ஆட்டத்தைக் காண முடியும்.

ஆறு பந்துகளையும் வெவ்வேறு விதமாக வீசக்கூடிய ரமேஷ், பேட்டிங்கில் வெளுத்து வாங்குவார். பல போட்டிகளில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்டுள்ளார். இவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பஞ்சாப்பை சேர்ந்த கிரிக்கெட் வீரர் குர்கீத் மான் சிங்கும் ரமேஷ் குமாரின் ஆட்டத்தைப் பார்த்துள்ளார். அவரின் திறமையை பார்த்து வியந்த அவர், ரமேஷ்குமாரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தார்.

ரமேஷ்குமார் விளையாடும் ஆட்டங்களை ஒளிப்பதிவு செய்த குர்கீத்மான்சிங், அந்த வீடியோக்களை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இணை பயற்சியாளராக இருக்கும் அபிஷேக் நாயருக்கு அனுப்பியுள்ளார். அதனைப் பார்த்த அவர், தொடர்ந்து தீவிர பயிற்சி செய்யுமாறு ரமேஷ்குமாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனால், பஞ்சாப்பில் உள்ள பிரபலமான கிரிக்கெட் அகாடமியான ஜேபி அட்ரேவில் சேர்ந்து பயிற்சி எடுத்தார்.

மேலும் படிக்க | சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு - இலங்கை வீரரை நீக்குமா?

பின்னர், அபிஷேக் நாயரின் அழைப்பின் பேரில் மும்பை சென்ற ரமேஷ்குமாருக்கு, எப்படி விளையாட வேண்டும் என்ற நுணுக்கங்களை அவர் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் ரமேஷ்குமார் பஞ்சாப் திரும்பிய நிலையில், அவரது பெயரை குர்கீத்மான் சிங் ஐபிஎல் ஏலத்தில் முறையாக பதிவு செய்தார். அறிமுக வீரர்களுக்கான பட்டியலில் இடம்பிடித்திருந்த அவரை, கொல்கத்தா அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதுவரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சில ஆயிரங்களைக் கொண்ட பரிசுத் தொகையில் விளையாடிக் கொண்டிருந்த அவர் ஒரே இரவில் லட்சாதிபதியானதுடன், மிகப்பெரிய ஜாம்பவான்களை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். சுனில் நரைன் போன்ற ஸ்டைல் ரமேஷிடம் இருப்பதால், பஞ்சாப் நரைன் என்றும் அவரை பட்டப்பெயர் வைத்து அழைக்கின்றனர். 

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் 2022: ஒரு நல்ல சமையல்காரனாக விரும்புகிறேன் - சுரேஷ் ரெய்னா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News