அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு -ஹஷிம் ஆம்லா!

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார்!

Last Updated : Aug 9, 2019, 06:56 AM IST
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு -ஹஷிம் ஆம்லா! title=

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார்!

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 3 சதம் அடித்தவர் என்ற பெருமை பெற்ற ஒரே தென்னப்பிரிக்க வீரரான ஹமிம் ஆம்லா, 124 டெஸ்ட் போட்டிகளிலும் 181 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்காக 44 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார் ஆம்லா. கடைசியாக உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஆடினார்.

124 டெஸ்ட் போட்டிகளில் 215 இன்னிங்ஸ்களில் 9,282 ரன்களை குவித்த ஹஷிம் ஆம்லாவின் டெஸ்ட் சராசரி 49.97 ஆகும். 28 சதங்களையும் 4 இரட்டைச் சதங்களையும் எடுத்த அபார வீரர் ஆவார் ஹஷிம் ஆம்லா.

அதேப்போல் ஒருநாள் போட்டிகளிலும் பல சாதனைகளில் முன்னிலை பெற்றிருந்த ஹஷிம் ஆம்லா மொத்தம் 8,113 ரன்களை 27 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் விளாசியுள்ளார். 

சமீபத்தில் முன்னணி பந்துவீச்சாள் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஆம்லா அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். எனினும் உள்நாட்டு கிரிக்கெட், மசான்சி சூப்பர் லீகிலும் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வை 2004-இல் இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கிய ஆம்லா, ஒருநாள் மற்றும் டி20 அறிமுகப் போட்டியில் முறையே 2008, மற்றும் 2009-ல் தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News