அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது இந்த அணிகள் தானா... அப்போ கப் ரோஹித்துக்கு தான்!

Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி உறுதி செய்துள்ள நிலையில், அரையிறுதியில் யாருடன் மோதப்போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 6, 2023, 01:26 PM IST
  • முதல் அரையிறுதிப் போட்டி வரும் ஏப். 15ஆம் தேதி நடைபெறும்.
  • அந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்.
  • 4ஆவது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்குதான் கடும் போட்டி நிலவுகிறது.
அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது இந்த அணிகள் தானா... அப்போ கப் ரோஹித்துக்கு தான்! title=

India National Cricket Team: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் இறுதிவாரம் இன்று முதல் தொடங்குகிறது எனலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - நெதர்லாந்து (IND vs NED) போட்டியோடு லீக் சுற்று நிறைவு செய்ய உள்ளது. 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டுமே அரையிறுதி சுற்றை உறுதிசெய்துள்ளது. ஆஸ்திரேலியா ஏறத்தாழ மூன்றாவது அல்லது இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடும் என சொல்லலாம். இனி ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுடன்தான் அந்த அணிக்கு போட்டிகள் உள்ளன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும்தான் உள்ளது. இரண்டு அணிகள் வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுமுனையில், ஆப்கானிஸ்தானுக்கு உள்ள 2 போட்டியில் ஏதேனும் ஒரே போட்டியை பெரிய வித்தியாசத்தில் வென்றால் அந்த அணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

இதுமட்டுமின்றி அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை அணிகள் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற இந்த அணிகள் கடுமையாக போட்டியிடும். இந்த பரபரப்புக்கு மத்தியில் இந்திய அணி மட்டும் ரிலாஸாக அரையிறுதிக்கு தகுதிபெற உள்ளது எனலாம். தென்னாப்பிரிக்கா அணி இந்தியா உடன் அடைந்த தோல்விக்கு பின் தனது இரண்டாவது இடத்தை தக்கவைக்க ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | IND vs SA: டிஜிட்டல் உலகில் புதிய சாதனை படைத்த இந்தியா vs சவுத்ஆப்பிரிக்கா போட்டி!

இந்திய அணி அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் முதலிடத்திலேயே நீடிக்கும் என்பதால் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா விளையாடும். லீக் சுற்று முடிவில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிதான் இந்தியா உடன் மோதும். மேலும், முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது என்பதால் இந்திய கவலையில்லாமல் உள்ளது. 

பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளே நான்காவது இடத்தில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி அரையிறுதி போட்டிகளில் கடுமையான திணறினாலும் இப்போது இருக்கும் ஃபார்மில் எந்த அணியை வேண்டுமானாலும் சமாளித்துவிடும் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நடப்பு தொடரில் வான்கடேவில் இலங்கையுடன் மோதிய இந்திய அணி, 55 ரன்களில் அந்த அணியை முடக்கியது. மேலும், 350+ ரன்களையும் இந்தியா குவித்தது. 

காயத்தால் அவதிப்பட்டும் வரும் நியூசிலாந்து தப்பித்தவறி அரையிறுதிக்கு வந்தாலும், இந்தியாவின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்துவிடும் என்பதே வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. பாகிஸ்தானில் வேகப்பந்துவீச்சு மிரட்டும் வகையில், இருந்தாலும் வான்கடேவில் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்டையும் வைத்துள்ளது. ஆனால், இந்தியா தற்போது வீழ்த்த முடியாத அணியாக உருவெடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளே இரண்டாவது அரையிறுதியில் மோதும் என்பதால், இந்திய அணி கூடுதல் குஷியில் இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு ஒருவேளை இந்தியா தகுதிபெற்றுவிட்டால், கோப்பையை ரோஹித் சர்மாதான் முத்தமிடுவார் என்பதை உறுதிசெய்துகொள்ளலாம் என்றே நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | இந்தியாவுடன் மோசமான தோல்வி... இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News