Google Doodle:: கூகுள் டூடூல் வெளியிட்டு வாழ்த்தும் கே.டி.ஜாதவ் யார்? அப்படி என்ன செய்துவிட்டார்?

khashaba dadasaheb jadhav birth anniversary: இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்றுக் கெடுத்த கே.டி.ஜாதவ்வுக்கு இன்று 97வது பிறந்தநாள் விழா. இதனையொட்டி அவருக்கு டூடுல் வெளியிட்டு கூகுள் வாழ்த்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2023, 02:04 PM IST
  • கூகுள் டூடுல் வெளியிட்டிருக்கும் கேடி ஜாதவ்
  • இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்
  • இதுவரை பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை
Google Doodle:: கூகுள் டூடூல் வெளியிட்டு வாழ்த்தும் கே.டி.ஜாதவ் யார்? அப்படி என்ன செய்துவிட்டார்? title=

khashaba dadasaheb jadhav birth anniversary: இந்தியாவில் ஒலிம்பிக் பற்றி அறிந்திராத காலத்திலேயே இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்று முதல் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்தவர் தான் இந்த கேடி ஜாதவ். இவருடைய முழுப்பெயர் காசாபா தாதாசாகேப் சாதவ். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஜாதவ் இளம் வயது முதலே மற்போர் பயிற்சி மேற்கொண்டார். மற்போர் என்றால் இப்போது குஸ்தி என்பதுதான். இந்தியாவின் மத்திய மற்றும் வட மாநிலங்களில் குஸ்தி அப்போது மிகவும் பிரபலம். கேடி ஜாதவ்வின் தந்தையும் குஸ்தியில் நன்கு பிரபலமானவர் என்பதால் இளம் வயது மகன் ஜாதவுக்கும் குஸ்தியை கற்றுக் கொடுத்தார்.

மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவை பற்றி இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் இப்படி சொல்லிட்டாரே..!

தந்தை மட்டுமல்லாது மகராஷ்டிராவின் கோல்ஷேவர் கிராமத்தில் இருந்த பிரபலமான மற்ற குஸ்தி பயிற்சியாளர்களிடமும் குஸ்தி பயிற்சி பெற்றார் காசாபா தாதாசாகேப் ஜாதவ். தொடர்ச்சியான பயிற்சிகளால் குஸ்தியில் தேர்ந்த வீரராகவும் மாறினார். குஸ்தி மட்டுமல்லாது நீச்சல் மற்றும் ஓட்டப்பந்தயத்திலும் வல்லவராக மாறினார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட ஜாதவ், மாநிலம் மற்றும் தேசிய அளவில் வெற்றிகளை குவித்தார். ஹெட்லாக் செய்வதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார் கே.டி.ஜாதவ். தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் கோலாப்பூர் மன்னரின் கவனத்தை ஈர்த்தார் கே.டி.ஜாதவ்.

அவரின் உதவியுடன் 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார் கே.டி.ஜாதவ். அந்த ஒலிம்பிக் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது. ஏனென்றால் சர்வதேச தரத்தினால் ஆன மேட்களில் குஸ்தி செய்து கே.டி.ஜாதவுக்கு பழக்கமில்லை. அவருக்கு குஸ்தி விதிமுறைகளும் தெரியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் களம் கண்ட அவர், உலகின் தலைச்சிறந்த குஸ்தி வீரர்களுடன் மோதி 6ஆம் இடத்தை பிடித்தார். 

ஆனால் அது அவருக்கு மிகப்பெரிய அவமானமாக பட்டது. அடுத்த 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக குஸ்தி பயிற்சியை இடைவிடாது மேற்கொண்டு 1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்யில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். அந்த குஸ்தி போட்டியில் ஜெர்மனி, ஜப்பான், மெக்சிகோ, கனடா நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த வீரர்களை வீழ்த்திய அவர், வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக்கில் சுதந்திர இந்தியாவுக்காக தனிநபர் ஒருவர் வென்ற முதல் பதக்கம் இதுவே. 

அந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியா திரும்பிய அவருக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசு கே.டி.ஜாதவ் இறந்த 10 ஆண்டுகள் கழித்து அதாவது 1992 -93 ஆண்டில் சத்ரபதி புரஸ்கர் விருது வழங்கி கவுரவித்தது. மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு முதல் பதம் விருதுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று பத்ம விருது பெறாதவராக இன்றும் கே.டி.ஜாதவ் இருக்கிறார். 

மேலும் படிக்க | தோனி இடத்தை காலி செய்ய கோலி போட்ட பிளான்; தடுத்த ரவி சாஸ்திரி - பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News