இன்று முதல் #IPL டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப பெறலாம்!

இன்று முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் தங்களின் பணத்தை திரும்ப பெறலாம்!

Last Updated : Apr 14, 2018, 09:43 AM IST
இன்று முதல் #IPL டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப பெறலாம்!  title=

ஐ.பி.எல் 11-வது சீசன் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி களமிறங்கியதால், சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சென்னை அணியின் ரசிகர்கள் அடுத்தடுத்த ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிவரும் வேளையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்புகள் வலுத்ததால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன.

இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதை தொடர்ந்து, சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் தங்களின் பணத்தை திரும்ப பெறலாம் என தெரிவித்திருந்தனர். 

சி.எஸ்.கே அணி போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. மேலும், ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து 20-ம் தேதிக்குள் 6 போட்டிக்கான டிக்கெட்-க்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம், அதன் பின் பணம் திருப்பி தரமாட்டாது எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து, இன்று முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் தங்களின் பணத்தை திரும்ப பெறலாம். 

Trending News