WTC Final 2023: இந்திய அணி தான் சாம்பியன் பாஸ்.. அவரே சொல்லிட்டார்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 3, 2023, 06:39 PM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
  • இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
  • ரவி சாஸ்திரியின் கணிப்பு பலிக்குமா?
WTC Final 2023: இந்திய அணி தான் சாம்பியன் பாஸ்.. அவரே சொல்லிட்டார்..! title=

இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன. ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி ஏற்கனவே லண்டன் சென்றடைந்தது. கென்னிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி பாசிட்டிவான கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இல்லையா?

ரவி சாஸ்திரியின் கணிப்பு 

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் நீண்டகால பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி WTC இறுதிப் போட்டி குறித்து பேசும்போது, ஐசிசி கோப்பையை வெல்லும் சக்தி இந்திய அணிக்கு இருக்கிறது. கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான் பயிற்சியாளராக இருந்தபோது நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை என்று சொல்லமாட்டேன். அந்த அணி மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடியது. அப்போது போலவே இப்போதும் ஐசிசி கோப்பையை வெல்லக்கூடிய பல வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். 

ஆஸ்திரேலியா என்ன செய்யும்?

ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடும் என்பதால் இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருக்கும் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இது ஒரு டெஸ்ட் போட்டி. இந்தியாவுக்கு சாதகமான சூழலே இருக்கிறது என்பதால் ஆஸ்திரேலியாவும் இந்தப் போட்டியில் கவனமாக விளையாடும். அதனால் இந்த போட்டி மிக கடுமையானதாகவே இருக்கும்.

ஐசிசி கோப்பைக்காக காத்திருக்கும் இந்தியா

கடைசியாக 2011-ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஆனால் இம்முறை சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடின. அதன்பிறகு இரு அணிகளும் இப்போது தான் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன என்பதால் டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | WTC Final: இஷானும் இல்லை... கேஎஸ் பாரத்தும் இல்லை; கீப்பருக்கு இவர் தான் சரி - மூத்த வீரர் தடாலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News