முதல் டெஸ்ட்: இந்தியா 488 ரன்னில் ஆல் அவுட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன் குவித்தது. ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.

Last Updated : Nov 12, 2016, 04:59 PM IST
முதல் டெஸ்ட்: இந்தியா 488 ரன்னில் ஆல் அவுட் title=

ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன் குவித்தது. ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்து இருந்தது. புஜாரா (124 ரன்), முரளி விஜய் (126) ஆகியோர் சதம் அடித்தனர். கேப்டன் வீராட் கோலி 26 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் நடை பெற்றது. 218 ரன்கள் பின் தங்கிய நிலையில், 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. வீராட் கோலியுடன் ரகானே இணைந்து ஆட்டத்தை தொடர்ந்தார்.

7-வது விக்கெட்டுக்கு அஸ்வின் - விர்த்திமான் சகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. சகா 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால், அஸ்வின் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் குவித்தார். 70 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட்டானதால் இந்தியா 488 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட 49 ரன்கள் இந்தியா பின்தங்கியது. 

 

Trending News