IND Vs ENG: முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கு இடம் இல்லை

England vs India, 1st ODI: இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது யார்? இரு அணிகளும் தயாராக உள்ளது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங்!

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 12, 2022, 05:45 PM IST
  • முதல் போட்டியில் முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து
  • டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
  • விராட்டின் இடுப்பில் காயம் - விளையாடவில்லை எனத் தகவல்
IND Vs ENG: முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கு இடம் இல்லை title=

England vs India, 1st ODI: மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. விராட்டின் இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவும், அர்ஷ்தீப்பின் வயிற்றின் வலது பக்கத்தில் வலி காரணமாக இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், அவர்கள் பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது இந்தியா

டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருப்பதாகவும், வானிலை மேகமூட்டமாக இருப்பதாகவும் ரோஹித் தெரிவித்துள்ளார். இது நமது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்தியாவுக்கு வெளியே விளையாடுவது எப்போதுமே கொஞ்சம் கடினம்தான் ஆனால் இந்த சவாலுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்க விரும்புகிறோம். இன்று எங்கள் அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 2 ஆல்ரவுண்டர்கள் மற்றும் நான்கு பந்துவீச்சாளர்கள் உள்ளனர். விராட் கோலி இன்று அணியில் இடம்பெறவில்லை எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியா டாஸ் வென்றதை குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், டாஸ் வென்று இருந்தால் நாங்களும் பந்துவீசியிருப்போம். இருப்பினும், முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். 

மேலும் படிக்க: விராட் கோலி இடத்தை கன்பார்ம் செய்த மும்பை வீரர்

சமீபத்திய டி20 தொடரில் இந்தியாவின் ஆட்டம் மிகவும் சிறப்பானது. வித்தியாசமான பாசிட்டிவிட்டியுடன் அந்த அணி களம் இறங்கியது. டி20 தொடரில் இந்தியாவின் ஆக்ரோஷம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மோட் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் முடிந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாட தயாராக உள்ளன. 

இந்தியா அணியில் விளையாடும் வீரர்கள்: 

ரோஹித் ஷர்மா (கேட்ச்), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (வ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து அணியில் விளையாடும் வீரர்கள்: 

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w/c), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி

மேலும் படிக்க: பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News