இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காம் நகரில் நடைப்பெற்று வருகிறது!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
முன்னதாக டி20 போட்டிகள் நடைப்பெற்று, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடர் இன்று முதல் துவங்குகிறது.
இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது.
ஆரம்பம் முதலே இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் சிக்கி தவித்த இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பெவுலியன் திரும்பினர். இங்கிலாந்து அணித் தரப்பில் பென் ஸ்டோக் 50(103) மற்றும் ஜோஸ் பட்லர் 53(51) ரன்கள் குவித்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்தியவின் தரப்பில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் குவித்தனர். இதனால் ஆட்டத்தின் 49.5 வது பந்தில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்களில் சுருண்டது.
A Rohit masterclass gives India the opening win! His 1 powers India to a comfortable 8 wicket victory against England with 59 balls remaining at Trent Bridge!#ENGvIND scorecard https://t.co/gypXiagUMS pic.twitter.com/N7dH3V6u5f
— ICC (@ICC) July 12, 2018
இதனையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 137(114) மற்றும் ஷிகர் தவான் 40(27) ரன்கள் குவித்து அணிக்கு பலம் செர்த்தன்னர். பின்னர் களமிறங்கிய கோலி 75(82), KL ராகுல் 9(18) ரன்கள் குவித்தனர். இதனால் ஆட்டத்தின் 40.1-வது பந்தில் வெற்றி இலக்கான 269 ரன்களை 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டியது.
ஆட்ட நாயகனாக 25 மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் குவித்த குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிநிலையில் உள்ளது.