ஆர்சிபி vs கேகேஆர், எலிமினேட்டர்: ஐபிஎல் 2021 பிளேஆஃப்களில் எலிமினேட்டர் போட்டிக்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) கேப்டன் விராட் கோலி, அதிக அழுத்தத்தை உருவாக்க "தகுதி மற்றும் எலிமினேட்டர்" போன்ற வார்த்தைகளை உருவாக்கப்பட்டு உள்ளது என்றார். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2021) இறுதிப் போட்டியை அந்த அணி அடைய முடியும்.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்குப் பின்னால் மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது. இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் "இன்சைட் ஆர்சிபி" (Inside RCB) நிகழ்ச்சியில் கோஹ்லி பேசுகையில், "எங்கள் அணியின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. நாங்கள் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேற முடியவில்லை என்பதால், இறுதிப் போட்டிக்கு செல்ல இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம் என்றார்."
"எல்லா வகையான தடைகளையும் உடைத்து வெற்றி பெற வேண்டும் என என்று தான் அனைவரும் தயாராகுகிறார்கள். என்னை பொறுத்தவரை "தகுதி மற்றும் எலிமினேட்டர்கள்" என்ற வாரத்தை போட்டிகளில் அதிக அழுத்தத்தை உருவாக்க உருவாக்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமே" என்று அவர் கூறினார்.
ALSO READ | எலிமினேட்டர்: இன்று தோற்றால்.. ஐபிஎல் 2021 பட்டத்தை வெல்லும் கனவு தகர்ந்துவிடும்
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டி மிக முக்கியமான போட்டி. இன்று எந்த அணி தோற்றாலும், ஐபிஎல் 2021 பட்டத்தை வெல்லும் அவர்களின் கனவு தகர்ந்துவிடும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அக்டோபர் 13 புதன்கிழமை நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
ஐபிஎல்லில் ஆர்சிபி மற்றும் கேகேஆருக்கு இடையே நடந்த 29 போட்டிகளில், கொல்கத்தா 16 போட்டிகளிலும், பெங்களூரு 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ | தோனியின் ஆட்டம் குறித்து புகழ்ந்த விராட் கோலி; வைரலாக போஸ்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR