சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஆல்-ரவுண்டர் பிராவோ....

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ (Dwayne Bravo) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2018, 02:17 PM IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஆல்-ரவுண்டர் பிராவோ.... title=

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ (Dwayne Bravo) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.... 

மேற்கு இந்திய கிரிக்கெட் அணியில், ஆல் ரவுண்டராக வலம் வந்த 35 வயதுடைய டுவைன் பிராவோ (Dwayne Bravo) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமான பிராவோ, கடந்த 14 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 14 ஆண்டு கிரிகெட் பயணத்தில் 40 டெஸ்ட் போட்டிகளிலும், 164 ஒருநாள் போட்டிகளிலும், 64 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவர் வெஸ்ட் இண்டீஸுக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடைசியாக விளையாடினார். 

அதேபோல அவர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு தான் வெஸ்ட் இண்டீஸுக்காக சர்வதே ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை. 

இந்நிலையில், தனது ஓய்வு குறித்து அறிவித்த பிராவோ, தனது வெற்றிக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை கிரிக்கெட் உலகுக்கு நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறேன். முதன் முதலாக, கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நான் நுழைந்தபோது எனக்கு பிரவுன் நிற தொப்பி அணிவிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதை நினைத்துப் பார்க்கிறேன்.

எனினும், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது வெற்றிக்கு ஆதரவாக இருந்து எண்ணற்ற ரசிகர்கள், எனது குடும்பத்தினர், சிறு வயதில் எனக்குப் பயிற்சி கிரிக்கெட் சங்கத்தினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்ஹ்டுக் கொள்கிறேன் என்று பிராவோ கூறியுள்ளார்.

 

Trending News