ரோஜர் பெடரர் (Roger Federer) ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் முழங்கால்களில் இரண்டு அறுவைசிகிச்சைகள் (knee operations) நடைபெற்றது. அவர் தனது பழைய உடற்தகுதிக்கு (fitness) திரும்பிக் கொண்டிருக்கிறார்.
ஆறு முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (Roger Federer) இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு முழங்கால்களிலும் அறுவைசிகிச்சை செய்துக் கொண்டார். அவர் இன்னும் பழைய உடற்தகுதியைப் பெறாததால் 2021 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
39 வயதான சுவிஸ் வீரர் பெடரர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீசனின் துவக்க கிராண்ட்ஸ்லாம் (Grandslam)போட்டியில் கலந்துக் கொண்டார். அதன்பிறகு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. சில நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
Also Read | Australia vs India 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்களை பந்தாடிய இந்திய பந்துவீச்சாளர்!!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, 2021 ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய ஓபன் (Australian Open) டென்னிஸ் போட்டிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து மூன்று வாரங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
துபாயில் (Dubai) உள்ள தனது ஆஃப்-சீசன் (off-season) தளத்தில் பயிற்சி செய்து வந்த பெடரர், போட்டி தாமதமாகத் தொடங்குவது தனக்கு சாதகமாக இருக்கலாம் என்று போட்டி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஃபெடரர், Tennis போட்டிகளில் விளையாடும் அளவு உடற்தகுதி பெறவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் டோனி கோட்ஸிக் (Tony Godsick) கூறினார்.
"ரோஜர் 2021 ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்" என்று கோட்சிக் (Tony Godsick) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் கடந்த இரண்டு மாதங்களில் முழங்கால் மற்றும் அவரது உடற்திறனில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
Also Read | ICC Team of the Decade பட்டியலில் முதலிடம் பிடித்த கேப்டன் தோனி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR