முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவின் டி20 உலகக் கோப்பை ரிசர்வ் பட்டியலில் இருந்து தீபக் சாஹர் விலக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை நியமிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து தீபக் நீக்கப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய தீபக், ராஞ்சி மற்றும் டெல்லியில் நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அக்டோபர் 4 அன்று சாஹருக்கு ஏற்பட்ட முதுகு வலி பிரச்சனையை பிசிசிஐ உறுதிப்படுத்தியது. தற்போது தீபக் சாஹர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், இதை கவனத்தில் கொண்டு அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அவரை விடுவித்து மாற்று வீரரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் முகமது ஷமி ஆகியோருடன் தீபக் சாஹர் பெயரிடப்பட்டு இருந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஷமி கோவிட் தொற்றால் பங்கேற்கவில்லை. காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட இருந்த வீரர்களில் ஷமியும் ஒருவர்.
மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!
தற்போதுள்ள நிலவரப்படி, பும்ராவுக்கு பதிலாக ஷமி அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிராஜ் மற்றும் தாக்கூர் கூடுதல் வீரர்களாக அக்டோபர் 13 அன்று ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். தீபக் சாஹரின் காயம், டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணியுடன் தாக்குருக்கு மற்றொரு எதிர்பாராத வாய்ப்பை அளித்துள்ளது. இந்தியாவுக்காக 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தாக்கூர், 9.25 ரன்ரேட்டில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி, 181.57 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை எடுத்துள்ளார். தாகூர் மற்றும் சிராஜை விட அனுபவத்தின் காரணமாக ஷமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (c), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
மேலும் படிக்க | ரோஹித் சர்மாவுக்கு ஜோடி இவரா - உலகக்கோப்பைக்கு இந்தியாவின் 'ஓப்பனிங்' பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ