சிஎஸ்கே அணி Retention செய்ய போகும் வீரர்கள்! கசிந்த தகவல்!

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.  கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு பலம் வாய்ந்த அணியாக உருமாறி கோப்பையை கைப்பற்றியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2021, 07:06 PM IST
சிஎஸ்கே அணி Retention செய்ய போகும் வீரர்கள்! கசிந்த தகவல்! title=

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.  கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு பலம் வாய்ந்த அணியாக உருமாறி கோப்பையை கைப்பற்றியது. 

ALSO READ 1992 முதல் 2021 வரை இந்திய அணி பயன்படுத்திய JERSEY! 

சென்னை அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் தங்களது முழு திறமையையும் இந்த தொடரில் வெளிபடுத்தினர்.  இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்து ஆரஞ் கேப்பை கைப்பற்றினார்.  மறுபுறம் பாப் டுப்ளஸி முக்கியமான ஆட்டங்களில் சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.  பவுலிங்கில் கலக்கிய தாகூர் உலக கோப்பை அணியிலும் இடம் பிடித்தார்.  ஒரு அணியாக விளையாடி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி.  இதனால் சென்னை அணியில் இடம் பெற்ற வீரர்களின் மதிப்பு தற்போது கூடியுள்ளது.  அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் இரண்டு புதிய அணிகள் இடம் பெறவுள்ளது.  இதனால் மெகா ஆக்சனும் நடைபெறவுள்ளது.  ஒரு அணி அதிகபட்சம் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.  அந்த வகையில் சென்னை அணி தக்கவைக்க முடிவு செய்துள்ள வீரர்களில் பெயர்கள் வெளியாகி உள்ளது.  

dhoni

தோனி, ஜடேஜா, ருத்திராஜ், பாப் அல்லது பிராவோவை தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஐபிஎல் பைனல் போட்டியில் நான் இன்னும் ஓய்வு பெற வில்லை என்று தோனி சூசகமாக சொல்லி இருந்தார்.  அடுத்த ஆண்டும் தோனி சென்னை அணிக்காக விளையாட உள்ளார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.  மேலும் ஆக்சனில் தங்களது பழைய வீரர்களையே சென்னை அணி மீண்டும் ஆக்சனில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக அமைவாரா வருண் சக்கரவர்த்தி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News