118 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா படைத்த சாதனை

கவுண்டி கிரிக்கெட்டில் 118 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கவுண்டி சீசனில் 3 இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் புஜாரா.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2022, 09:50 PM IST
  • கவுண்டி கிரிக்கெட்டில் சதமடித்த புஜாரா
  • ஒரு சீசனில் 3 இரட்டை சதமடித்த வீரர்
118 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா படைத்த சாதனை title=

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பார்ம் அவுட்டில் தவித்த அவருக்கு இந்திய அணியிலும் கேள்விக்குறியான நிலையில் கவுண்டி கிரிக்கெட் விளையாடும் முடிவை எடுத்தார். ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாமல், கவுண்டி கிரிக்கெட்டில் தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்து இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். அவரின் இந்த முடிவு சரியாகவும் அமைந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த அவர், அந்த தொடர் முடிவடைந்ததும் கவுண்டி கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார். 

மேலும் படிக்க | ராகுல் டிராவிட்டை டான்ஸ் ஆட வைத்த ஷிகர் தவான்! வைரலாகும் வீடியோ!

சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், பந்துவீச்சாளராகவும் மாறினார். பேட்டிங்கில் உட்சபட்ச பார்மிலும் இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் இருக்கும் சசெக்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மிடில் சசெக்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். 368 பந்துகளை (498 நிமிடங்கள்) எதிர்கொண்ட அவர், இரட்டை சதம் விளாசி அசத்தினார். இதில் 19 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். 

இந்த இரட்டை சதம் மூலம் 118 ஆண்டுகால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் இரட்டை சதங்கள் அடித்த முதல் சசெக்ஸ் வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இந்த சீசனில் மட்டும் ஏழு கவுண்டி ஆட்டங்களில் விளையாடி ஐந்தாவது சதத்தை அடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சசெக்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது களம் புகுந்த புஜாரா, டாம் ஆல்சோப்புடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவானது. 

முந்தைய அதிகபட்சம்

130 – வீரேந்தர் சேவாக் (லீக்ஸ்) 2003
127 – ரவி சாஸ்திரி (கிளாம்) 1989
112 – அப்துல் கர்தார் (வார்விக்ஸ்) 1950
112 – பியூஷ் சாவ்லா (சாமர்செட்) 2013

மேலும் படிக்க | முன்னா பாயாக மாறிய ரிஷப்பன்ட்! புது ஸ்டைலில் கலக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News