Zee Exclusive: ஊக்கமருந்து ஊசியில் திளைக்கும் இந்திய வீரர்கள்... சேத்தன் சர்மாவால் அம்பலமான தகவல்கள்!

Chetan Sharma Sting Operation: இந்திய கிரிக்கெட் அணியில் போலி ஊக்க மருந்து ஊசிகள், விராட் - கங்குலி மோதல், அணி தேர்வில் தலையீடு உள்ளிட்ட பல ரகசியங்கள் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 14, 2023, 09:02 PM IST
  • Zee Media மறைமுக ஆப்ரேஷன் நடத்தியது.
  • இதில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன.
  • ஊக்கமருந்து சர்ச்சை பெரும் புயலை கிளப்பியுள்ளது.
Zee Exclusive: ஊக்கமருந்து ஊசியில் திளைக்கும் இந்திய வீரர்கள்... சேத்தன் சர்மாவால் அம்பலமான தகவல்கள்! title=

Chetan Sharma Sting Operation: Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைமை அணித் தேர்வாளர் சேத்தன் சர்மா இந்திய அணியில் நடைபெறும் பெரும் அத்துமீறல்கள் குறித்து பேசியது தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

குறிப்பாக, இந்திய வீரர்கள் உடற்தகுதிக்காக ஊக்கமருந்து ஊசியை செலுத்திக்கொள்வதாக அவர் பதிவிட்டதும், பும்ராவின் உடற்தகுதி குறித்தும் அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் பிசிசிஐயில் மட்டுமின்றி, ஐசிசியிலும் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 

Zee Media-வின் உளவு கேமராவில் சேத்தன் சர்மா பேசிய பதிவாகியிருந்தது. அதில், அவர், "வீரர்களுக்கு உடற்தகுதி இல்லை. ஆனால் அவர்கள் விளையாடுவதற்காக ஊக்கமருந்து ஊசி போடுகிறார்கள். அவர்கள் 80% உடற்தகுதியுடன் கூட விளையாட தயாராக உள்ளனர். ஊசி போட்டு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு பெரிய காயம் இருந்ததால் அவரால் ஊக்கமருந்தை ஊசி மூலம் செலுத்தி, விளையாட வர முடியவில்லை. அதைத் தவிர, ஓரிரு வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊசி போட்டுக்கொண்டு விளையாடத் தகுதியானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்" என்றார்.

மேலும் படிக்க | ZEE Exclusive: உளவு கேமராவால் கசிந்த ரகசியங்கள்... கிழியும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகத்திரை!

அப்போது, அவர் எதிரில் இருப்பவர், இந்திய அணி வீரர்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு, "இல்லை! நான் ஊசிகளைப் பற்றி பேசுகிறேன். அவர்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது ஊக்கமருந்துகளில் வரும். ஊக்கமருந்து எதிர்ப்பு ஊசியில் எந்த ஊசி வரும் என்று இந்திய அணி வீரர்கள் அறிந்திருக்கிறார்கள்" என கூறினார். 

இந்த கருத்துகள் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அணியில் வீரர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு, ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையை பிசிசிஐ இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், சேத்தன் சர்மாவின் இந்த தகவல்கள் பிசிசிஐ அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்ற வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, விராட் கோலி - கங்குலி இடையேயான பிரச்னை, கேப்டன்கள் ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களுக்கு வேண்டிய வீரர்களை எப்படி அணியில் எடுக்கிறார்கள் உள்பட அனைத்து தகவல்கள் அடுத்தடுத்து முழு விவரத்துடன் வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! ரசிகர்கள் அதிர்ச்சி
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News