சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனி வெளியேறினால் என்ன நடக்கும்? என்பதை பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2022, 06:36 PM IST
  • தோனி குறித்து சோயிப் அக்தர் ஆருடம்
  • சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கலாம்
  • தோனி இல்லாமல் சென்னை அணி இல்லை
சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம் title=

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இது குறித்து ஸ்போர்ட்ஸ்கீடாவுக்கு பேட்டியளித்த சோயிப் அக்தர், அடுத்த சீசனில் சரியான முன்தயாரிப்புகளுடன் வர வேண்டும் எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடருக்கு சில நாட்களுக்கு முன்பாக தோனியிடம் இருந்த கேப்டன்ஷிப் ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்படது சரியில்லை. இதனால் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டமும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அக்தர், சென்னை அணி குழப்பத்தில் இருப்பதாக கூறியுள்ளார். 

இந்த சீசனை சென்னை அணி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். தோனிக்கு பிறகான சிஎஸ்கே என்பது ஜீரோ தான் எனக் கூறியுள்ளார். அக்தர் பேசும்போது, " சென்னை அணி குழப்பத்தில் உள்ளது. போட்டிக்கு முன்பாக தோனியை கேப்டன்ஷிப்பில் இருந்து இறக்கியது தவறு. ஜடேஜாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதால், தனிப்பட்ட வீரராக அவரின் ஆட்டமும் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பிறந்தநாளில் சிஎஸ்கேவுக்கு எதிராக பொல்லார்டு விளையாடாதது ஏன்? பின்னணி

என்னைப் பொறுத்தவரை சென்னை அணி இப்போது குழப்பத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டு தெளிவான முன் தயாரிப்புகளுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும், இந்த சீசனை அவர்கள் பெரிதாகவும் நினைக்கவில்லை. தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது இருப்பது போல் இருக்காது. அதனால், நிச்சயம் சென்னை அணியின் நிர்வாகத்திலோ அல்லது பயிற்சியாளராகவோ இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதைத் தான் விரும்பும். 

முதலில் அவர்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 2 தொடர்களுக்கு தோனி விளையாடலாம். இதற்கு முதலில் அவர் விரும்ப வேண்டும். தோனியை பயிற்சியாளராக நியமிப்பது என்பது தவறான முடிவாக இருக்காது. வழிகாட்டியாக க்கூட நியமிக்கலாம். ஏனென்றால், தோனி ஏற்கனவே இந்திய அணியின் வழிகாட்டியாக செயல்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அடுத்த விராட் கோலி இவர் தான் - ரோகித்சர்மா கூறும் வீரர் யார்?  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News