அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் தனது முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். டிரம்ப் அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற நிலையில், அவரை கவுரவிக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் முக்கிய வர்த்தக பிரமுகர்களின் குறிப்பிடத்தக்க கூட்டம் முன்னர் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டிரம்ப் நாட்டின் கடனைக் குறைப்பதற்கும் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும் உறுதியளித்தார், இதற்காக ஒரு தனி குழுவையும் அமைத்துள்ளார் டிரம்ப். இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து.. 20 வருடங்களுக்கு முன்பே கணித்த 'The Simpsons'!
டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் என்ன மாற்றங்களை கொண்டுவர போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை குறிக்கும் வகையில், தனது முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலான நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இவற்றில் பல அவர் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளுடன் இணைந்துள்ளது. தெற்கு எல்லையை வலுப்படுத்துதல், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த நபர்களை வெளியேற்றுதல், திருநங்கைகளை பெண்கள் பட்டியலில் இருந்து நீக்குதல், அரசாங்க நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பல முக்கியமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் போன்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள்
- மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றப்படும்.
- பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி திட்டம் வகுக்கப்படும்.
- வீட்டில் இருந்து பணி புரியும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். மறுக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
- அமெரிக்காவில் போதைப்பொருள் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். இவற்றை விற்பனை செய்பவர்கள் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்படுவார்கள்.
- பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க திட்டம் வகுக்கப்படும். விரைவில் அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும்.
- முன்னர் சொன்னது போல பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டு வரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை.
- சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சீன பொருட்கள் மீது 60%, மெக்சிகன் தயாரிப்புகள் மீது 25% வரிகளை முன்மொழிந்தார். இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- அரசின் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும், அமெரிக்க மக்களுக்கு பேச்சு சுதந்திரம் மீண்டும் கொண்டு வரப்படும்.
- வெளிப்புற வருவாய் சேவையை கொண்டு வருவோம். இதன் மூலம் மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். இது அமெரிக்க மக்களின் நலனுக்காக செய்யப்படும். இதன் மூலம் அரசிற்கு கூடுதல் பணம் கிடைக்கும்.
- அனைத்து மக்களும் மின்சார வாகனம் (EV) வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தகர்த்தப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான எந்த ஒரு காரையும் வாங்கி கொள்ளலாம்.
- யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விகிதத்தில் அமெரிக்கா ஆட்டோமொபைல் துறை அதிக உற்பத்திகளை செய்யும்.
- எரிசக்தி செலவைக் குறைக்கவும், மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவும் தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
- உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க முடியும். மேலும் அமெரிக்காவிற்கும் இது பலனளிக்கும்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
மேலும் படிங்க: டென்னிஸ் வீராங்கனையை மணம் முடித்த நீரஜ் சோப்ரா! யார் அந்த ஹிமானி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ