உடனடியாக அமலுக்கு வந்த விதிகள்! இனி இந்திய வீரர்களுக்கு இந்த வசதிகள் இருக்காது!

India vs England: இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பிசிசிஐயின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2025, 07:03 AM IST
  • பிசிசிஐ புதிய விதிகள்.
  • உடனே அமலுக்கு வந்தது.
  • தனி வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
உடனடியாக அமலுக்கு வந்த விதிகள்! இனி இந்திய வீரர்களுக்கு இந்த வசதிகள் இருக்காது! title=

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய தொடர்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது, இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணி வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடாதது தான் என்று கூறப்பட்டது.  மேலும் பிசிசியின் புதிய விதிகளின்படி சுற்றுப்பயணிகளின் போது வீரர்களின் குடும்பத்தினர் உடனிருக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | "ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட வேண்டும்" - சுரேஷ் ரெய்னா!

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டி20 கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் எந்த ஒரு வீரர்களுக்கும் தனிப்பட்ட வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அனைவரும் பிசிசிஐ ஏற்பாடு செய்த வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. "பிசிசிஐ வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி பெங்கால் கிரிக்கெட் வாரியம் செயல்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு தனிப்பட்ட வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று பெங்காலி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சினேகாசிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஒரு சில வீரர்கள் உள்ளூர் தொடர்களின் போது தனிப்பட்ட வாகனங்களில் பயணம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது, அதனை தொடர்ந்து பிசிசிஐ புதிய விதிகளில் இவற்றையும் சேர்த்துள்ளது. இது வீரர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜடேஜா, ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மா வரவிருக்கும் ரஞ்சி டிராபியில் தங்களின் மாநில அணிக்காக விளையாட உள்ளனர். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பிசிசிஐயின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்)

மேலும் படிக்க | இந்திய அணியில் இடமில்லை, விரைவில் ஓய்வை அறிவிக்கப்போகும் ஸ்டார் பவுலர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News