இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது டப்ளின் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இந்தப் போட்டியின் மூலமாக ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அறிமுகமானார்கள். இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பல்பிர்னி மற்றும் கேப்டன் பால் ஸ்டிர்லிங் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். அதன்படி பல்பிர்னி பேட்டிங் ஆடினார். முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அவர், 2ஆவது பந்தில் கிளீன் போல்டானார்.
மேலும் படிக்க | இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை!
இதன் மூலமாக பும்ரா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு அணிக்கு திரும்ப வந்து தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அதுமட்டுன்றி, போட்டியின் 5ஆவது பந்திலும் லோர்கன் டக்கரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோர்கன் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடித்தார். இதன் மூலமாக முதல் ஓவரிலே பும்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அர்ஷ்தீப் சிங் தன் பங்குக்கு ஒரு விக்கெட் எடுத்தார். ஒரு கட்டத்தில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த அயர்லாந்து அணியை மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேம்பர் நிதானமாக ஆடி கரை சேர்த்தார். அவர் 33 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.
Vector_45R) August 18, 2023
அவர் கொடுத்த அடித்தளத்தில் நின்று விளையாடிய மெக்கர்த்தி நாலாபுறமும் இந்திய அணியின் பந்துவீச்சுகளை சிதறடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 33 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். 20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு ஆப்பு வைக்கிறாரா ஜிதேஷ் சர்மா? டீம் இண்டியா என்ன செய்யும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ