Breaking! பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது ஏன்?

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் தலையீடு இருந்ததால் சாடியன் கால்பந்து சங்கத்தையும் (Chadian Football Association (FTFA)) ஃபிஃபா தடை செய்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 7, 2021, 07:10 PM IST
  • பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது
  • அரசாங்கத்தின் தலையீடு இருந்ததால் சாடியன் கால்பந்து சங்கத்தையும் ஃபிஃபா தடை செய்தது
  • அண்மையில் லாகூரில் PFF தலைமையகத்தை சட்டவிரோதமாக ஒரு குழுவினர் கையகப்படுத்தினர்
Breaking! பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது ஏன்? title=

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் தலையீடு இருந்ததால் சாடியன் கால்பந்து சங்கத்தையும் (Chadian Football Association (FTFA)) ஃபிஃபா தடை செய்தது.

மூன்றாம் தரப்பினரின் தலையீடு காரணமாக கால்பந்தின் உலக நிர்வாக குழு ஃபிஃபா (FIFA),  புதன்கிழமையன்று பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை (Pakistan Football Federation (PFF)) இடைநீக்கம் செய்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஃபீஃபா அறிவித்தது. அரசாங்கத்தின் தலையீடு காரணமாக சாடியன் கால்பந்து சங்கமும் (FTFA) தடை செய்தது.

இந்தத் தடை தொடர்பாக ஃபிஃபா தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “அண்மையில் லாகூரில் உள்ள பி.எஃப்.எஃப் (PFF) தலைமையகத்தை சட்டவிரோதமாக ஒரு குழுவினர் கையகப்படுத்தியுள்ளனர். இது நிலைமையை மோசமாக்கியுள்ளது. ஃபிஃபாவால் நியமிக்கப்பட்ட ஹாரூன் மாலிக் தலைமையிலான பணிக் குழுவை அகற்ற சில நபர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதோடு, பி.எஃப்.எஃப் தலைமையை சையத் அஷ்பக் உசேன் ஷாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முயற்சி செய்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

Also Read | IPL 2021 RCB vs MI: ரசிகர்களுக்கு விராட் சொல்லும் Strong சேதி என்ன தெரியுமா?

இந்த ஆண்டு மார்ச் 27 அன்று PFFஇன் முன்னாள் தலைவர் சையத் அஷ்பக் உசேன் ஷா மற்றும் அவரது குழுவினரால் பி.எஃப்.எஃப் அலுவலகம் தாக்கப்பட்டது. அதோடு உள்ளே இருந்தவர்கள். பிணைக் கைதிகளாக்கப்பட்டனர். 
அதன்பிறகு விவகாரத்தை கையில் எடுத்த ஃபிஃபா, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர் எச்சரிக்கை கடிதம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பி.எஃப்.எஃப் இன் முழு கட்டுப்பாடும் ஹாரூன் மாலிக்கிற்கு வழங்கப்பட்டால் மட்டுமே இந்த உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும் ஃபிஃபா உறுதியாக தெரிவித்துள்ளது.

"பி.எஃப்.எஃப் இன் வளாகங்கள், கணக்குகள், நிர்வாகம் மற்றும் தகவல்தொடர்பு சேனல்கள் மீண்டும் அதன் முழு கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை பி.எஃப்.எஃப் இன் இயல்பாக்கக் குழுவிடம் இருந்து உறுதி பெறவேண்டும். அதுமட்டுமல்லாமல், தடங்கல் இன்றி தனது நிர்வாகத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்பதையும் பி.எஃப்.எஃப் இன் இயல்பாக்கக் குழுவிடம் இருந்து உறுதி செய்யப்பட்ட பிறகே இந்தத் தடை நீக்கப்படும்" என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.

Also Read | Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News