கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இனி பார்சிலோனா அணிக்காக விளையாடமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
"FC பார்சிலோனா அணிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இரு தரப்பினரும் இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற விரும்பியது நடைபெறவில்லை. இதற்கு காரணம் நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் (ஸ்பானிஷ் லிகா விதிமுறைகள்) " என்று பார்சிலோனா கால்பந்து கிளப் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பார்சிலோனா அணி சிறிது நேரத்திற்கு முன்னதாக டிவிட்டர் செய்தியையும் வெளியிட்டது.
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா கிளப்புடனான ஒப்பந்தம் காலாவதியானதால் லியோனல் மெஸ்ஸி தனி வீரரானார்.
சமீபத்தில், லியோனல் மெஸ்ஸி ஜேவியர் மசெரனோவின் சாதனையை முறியடித்து, தனது நாட்டில் அதிக கோல் அடித்த வீரரானார். கோபா அமெரிக்கா போட்டியின் போது பொலிவியா-வுக்கு (Bolivia) எதிராக லியோனல் மெஸ்ஸி இந்த சாதனையை நிகழ்த்தினார். பொலிவியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றார் 34 வயது லியோனல் மெஸ்ஸி.
தனது தாய்நாடான அர்ஜென்டினாவிற்காக Copa America சாம்பியன்ஷிப்பில் விளையாடும் மெஸ்ஸி, இனிமேல் எந்த கிளப்பில் வேண்டுமானாலும் இணைந்துக் கொள்ளலாம்.
Also Read | Football: இனி லியோனல் மெஸ்ஸி எந்த அணிக்கும் சொந்தமில்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR