Sourav Ganguly vs BCCI: பிசிசிஐயில் இருந்து சவுரவ் கங்குலி வெளியேறியதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை...' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்க்கு பா.ஜ.க. சூடாக பதிலடி கொடுத்துள்ளது, தற்போது வைரல் செய்தியாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பிசிசிஐயில் இருந்து கங்குலி வெளியேறியதையும், பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு வெளிப்படையாக மறுத்ததையும் இணைத்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி பேசியது. பிசிசிஐ தலைவரும், பிரபல கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலியை தங்கள் கட்சியில் சேருமாறு பாஜக அழுத்தம் கொடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலகியது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே வார்த்தைப் போரைத் தூண்டியுள்ளது.தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி, “சௌரவ் கங்குலியை விமர்சிப்பவர்கள் தங்களை கண்ணாடியில் பார்க்க வேண்டும். பிசிசிஐயில் இருந்து கங்குலி வெளியேறியதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வரும் நாட்களில் சவுரவ் கங்குலி வேறு உச்சங்களை எட்டுவார்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | பேங்க் வேலை! ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.63840! அசத்தும் வேலைவாய்ப்பு
சமீபத்தில் கங்குலியின் இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கும், கிரிக்கெட் வாரியத்தில் இருந்து அவர் அதிரடியாக வெளியேறியதற்கும் இடையே சாத்தியமான தொடர்பு பற்றிய வதந்திகளை பாஜக எம்பி திட்டவட்டமாக நிராகரித்தார்.
Amit Shah visited Sourav Ganguly's house few months ago.There's info Ganguly was approached repeatedly to join BJP.Probably as he hasn't consented to join BJP&is from Bengal,he's become prey to political vendetta.Amit Shah's son retained as BCCI secy,but not Ganguly: Dr S Sen,TMC pic.twitter.com/jCI3wYpIC2
— ANI (@ANI) October 12, 2022
1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினரான ரோஜர் பின்னி, கங்குலிக்கு பதிலாக பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவார் என்று வதந்திகள் எழுந்துள்ளன. அமித் ஷா சில மாதங்களுக்கு முன்பு சவுரவ் கங்குலியின் வீட்டுக்குச் சென்றார். பாஜகவில் சேருமாறு கங்குலியை பலமுறை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | NCERTயில் வேலை செய்ய விருப்பமா? இந்த தகுதிகள் இருந்தால் உடனே விண்ணப்பிக்கவும்
ஒருவேளை அவர் பாஜகவில் சேர சம்மதிக்காததாலும், வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் அரசியல் பழிவாங்கலுக்கு இரையாகிவிட்டாரோ என்று திரிணாமுல் காங்கிரஸ் ஐயம் எழுப்பியுள்ளது. அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகத் தக்கவைக்கப்பட்டுள்ளார், ஆனால் கங்குலி தக்க வைக்கப்படவில்லை,” என்று டிஎம்சியின் டாக்டர் எஸ் சென் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், கங்குலிக்கு கட்சியில் சேர அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கும் பாஜக, “சௌரவ் கங்குலியை பாஜக எப்போது கட்சியில் சேர்க்க முயன்றது என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். பிசிசிஐயில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சிலர் முதலைக் கண்ணீர் வடித்து வருகின்றனர். பிசிசிஐ தலைவராக அவர் பொறுப்பேற்றபோது, அவருக்கு பாஜகவுடன் ஏதாவது தொடர்பு இருந்ததா? திரிணாமுல் கட்சி ஒவ்வொரு பிரச்சினையையும் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும்” என்று பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ