India National Cricket Team: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மட்டும் பாக்கியுள்ளது. டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்த நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது டெஸ்ட் தொடர் (IND vs SA Test Seried) நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி (IND vs SA 2nd Test) வரை ஜன.3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா (Team India) தொடரை சமன் செய்ய இயலும். ஒருவேளை, இந்தியா டிரா செய்தாலோ அல்லது தோல்வியுற்றாலோ தொடரையும் இழந்துவிடும். தென்னப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது இந்த முறையும் தொடர்கிறது.
இரண்டாவது போட்டி கேப்-டவுன் (Capetown Test) நகரில் விளையாட உள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் இந்த மூன்று விஷயங்களை முதலில் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | ஊசிப்போட்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஷமி... அதிரவைக்கும் தகவல்!
சூழலை புரிந்துகொள்ளுதலும், பொறுமையும்...
2021ஆம் ஆண்டில் இந்திய அணி சென்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியிருந்தது. அதில் முக்கிய காரணமாக முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தற்போதைய காம்பிஷேனில் இல்லாததும் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவுதான் எனலாம். அதாவது அவர்கள் ஏற்படுத்தும் சமநிலை என்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தாக்கத்தை செலுத்தும். அவர்களுக்கான சரியான மாற்று வீரர்களையும் (ஷர்துல், பிரசித் கிருஷ்ணா) இந்தியா கண்டடையவில்லை எனலாம்.
இந்திய அணி சூழலுக்கு ஏற்றவாறு பந்துவீசவோ, பேட்டிங் செய்வோ இல்லை என்பதுதான் முதல் டெஸ்ட இந்திய அணிக்கு சொல்லும் பாடமாகும். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தென்னாப்பிரிக்கா பேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, அதை அப்படியே பின்னாடி இழுத்தார்கள் ஷர்துலும், பிரசித் கிருஷ்ணாவும். பேட்டிங்கிலும் ரோஹித், சுப்மான் கில் ஆகியோர் சூழலை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் அதிரடி காட்ட முனைந்தது தோல்விக்கு இட்டுச்சென்றது. எனவே, சூழலை புரிந்துகொண்டு செயல்படுவதும், பொறுமை காப்பதும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
களத்தில் தில்லாக நிற்பது...
விராட் கோலி தலைமையில் இந்திய அணி அந்நிய மண்ணில் அத்தனை டெஸ்ட் வெற்றிகளை பெற்றதற்கு முக்கிய காரணம், அப்போது ஒட்டுமொத்த குழுவாக காட்டிய தில்லான செயல்பாடுதான். எதிரணியை தொடர்ந்து தாக்குதல் நடத்தி நிலைக்குலைய வைப்பது, உளவியல் ரீதியாக உறுதியாக இருந்தால்தான் முழுமை பெறும். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்கா பேட்டர்களை அச்சுறுத்தவேயில்லை எனலாம். அந்த தில்லான செயல்பாட்டை கைக்கொண்டால்தான் கேப்டவுணில் நடைபெறும் அடுத்த போட்டியில் கொடி நாட்ட முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ