சிஎஸ்கேவை பார்த்தாலே வெளுத்து வாங்கும் வீரர்... பஞ்சாப் அணியில் இன்று ரீ-என்ட்ரி?

CSK vs PBKS Match Preview: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் இன்றைய போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவாண் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 1, 2024, 09:05 AM IST
  • கடந்தாண்டு சிஎஸ்கேவை பஞ்சாப் அணி வீழ்த்தியிருந்தது.
  • கொல்கத்தாவை வீழ்த்திவிட்டு பஞ்சாப் அணி பிரஷாக வந்துள்ளது.
  • பிளே ஆப் செல்ல இரு அணிகளும் இது முக்கியமான போட்டியாகும்.
சிஎஸ்கேவை பார்த்தாலே வெளுத்து வாங்கும் வீரர்... பஞ்சாப் அணியில் இன்று ரீ-என்ட்ரி? title=

CSK vs PBKS Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் 17வது சீசன் (IPL 2024) தற்போது பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 9, 10 லீக் ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற 10 அணிகளும் இன்னும் முட்டி மோதி வருகின்றன. மும்பை, பெங்களூரு அணிகள் முறையே கடைசி 9, 10ஆவது இடத்தில் இருந்தாலுமே சற்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. 

அதேபோலவே, 8வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி இருந்தாலும் அந்த அணி இன்னும் பிளே ஆப் ரேஸில் முன்னணியில்தான் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் இருந்தே வலுவாக இருந்தாலும் அந்த அணியின் சற்று மோசமான காம்பினேஷன் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை. அதிலும் குறிப்பாக ஷிகர் தவாணின் (Shikhar Dhawan) காயத்திற்கு பிறகு அந்த அணியின் ஓப்பனிங்கும் சுமாராகவே இருந்தது.

பிரஷாக வரும் பஞ்சாப்  

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 262 ரன்களை துரத்தி வரலாற்று சிறப்புமிக்க சேஸிங்கை செய்தது. அதன்பின் தற்போது நேராக சென்னை சேப்பாக்கத்திற்கு வந்துள்ள பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை இன்று சந்திக்கிறது. பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோவ் கடந்த போட்டியில் முரட்டு பார்முக்கு திரும்பினர். மிடில் ஆர்டரில் ரூசோ, சாம் கரன், ஷஷாங்க் சிங், ஜித்தேஷ் சர்மா, அஷுடோஷ் சர்மா என ஹர்பிரீத் ப்ரர் வரை நீண்ட பேட்டிங் உள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2024ஐ விட்டு வெளியேறும் வீரர்கள்! சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு!
 

ஒருவேளை சேப்பாக்கத்திலும் (Chepauk Stadium) அந்த அணிக்கு சேஸிங் கிடைத்தால் சென்னைக்கு இன்று சிக்கல்தான். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யாது என நம்பலாம். பேட்டிங் ஆர்டரில் ரஹானேவின் ஓப்பனிங் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இருப்பினும் அவருக்கு சிஎஸ்கே மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்கும். 

சிஎஸ்கேவின் பேட்டிங்

சேப்பாக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 108, 98 என அடுத்தடுத்து பெரிய இன்னிங்ஸை விளையாடி வருவதால் அவர் இன்றும் பேட்டிங்கில் மிளிர்வார் என எதிர்பார்க்கலாம். ஒன் டவுணில் மிட்செல், தூபே, மொயின் அலி, ஜடேஜா, தோனி ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பாக கைக்கொடுக்கின்றனர். இம்பாக்ட் வீரராக இறங்கும் ஷர்துல் தாக்கூர் இதுவரை பேட்டிங்கே விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் பிரச்னை

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சாம் கரன், ரபாடா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் என வரிசைக்கட்டி நிற்கின்றனர். அனைவருமே சிறப்பான பந்துவீச்சாளர்கள் என்றாலும் ரன்களை அதிகமாக லீக் செய்வது பஞ்சாப்புக்கு பிரச்னையாக உள்ளது. ஹர்பிரீத் ப்ரர், ராகுல் சஹார் ஆகியோர் கட்டுக்கோப்பாக வீசுகின்றனர். 

இதேபோலவே, சிஎஸ்கேவில் துஷார் தேஷ்பாண்டே, பதிரானா, முஸ்தபிசுர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக வீசினாலும் தீபக் சஹார் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பவர்பிளேவில் அவர் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும். ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சாளர்களாக களமிறங்குவார்கள். 

தவாண் வருவாரா?

முன்னர் சொன்னது போலவே இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவாண் காயத்தில் இருந்து மீண்டு வருவாரா என்பதும் கேள்வியாக உள்ளது. அவர் வந்தால் பிரப்சிம்ரன் சிங் இம்பாக்ட் வீரராக வரலாம். இன்றும் டாஸ் ஜெயிக்கும் அணி பந்துவீசவே முடிவெடுக்கும், எனவே டாஸ் முக்கியமானது. 

நேருக்கு நேர்

இதுவரை சிஎஸ்கே - பஞ்சாப் அணி (CSK vs PBKS) 28 போட்டிகளில் மோதி சிஎஸ்கே 15 போட்டிகளிலும், பஞ்சாப் 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் மோதி சிஎஸ்கே 4 போட்டிகளிலும், பஞ்சாப் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது நினைவுக்கூரத்தக்கது.  

மேலும் படிக்க | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலி - கேஎல் ராகுல் கோபம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News