சாம்பியன்ஸ் டிராபியில் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்... பெருமூச்சு விடும் எதிரணிகள்

Champions Trophy 2025: வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2025, 09:11 PM IST
  • சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப். 19ஆம் தேதி தொடங்குகிறது.
  • அதற்கு முன் இலங்கையில் ஆஸ்திரேலியா 2 டெஸ்ட்களை விளையாடுகிறது.
  • பாட் கம்மின்ஸ் இந்த இலங்கை தொடரிலும் பங்கேற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபியில் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்... பெருமூச்சு விடும் எதிரணிகள் title=

Champions Trophy 2025: தற்போதைய கிரிக்கெட் உலகில் பலராலும் ரசிகப்படும், குறிப்பாக எதிரணி வீரர்களாலும் வியந்து பார்க்கப்படும் கேப்டன் என்றால் அது பாட் கம்மின்ஸ் தான். இவர் கடந்த 2021ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிவி பாலியல் புகார் காரணமாக அந்தப் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் ஆஸ்திரேலிய அணியின் 47வது டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதன்பின், பாட் கம்மின்ஸ் தொட்டதெல்லாம் தங்கமானது என்றுதான் கூற வேண்டும். பாட் கம்மின்ஸ் தலைமையில் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும், 2023 ஐசிசி உலகக் கோப்பையையும் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அதை தொடர்ந்து, 2023 ஆஷஸ் தொடரையும், தற்போது ஆஸ்திரேலிய கடந்த இரண்டு முறை இந்திய அணியிடம் சொந்த மண்ணில் இழந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபியில் பாட் கம்மின்ஸ் இல்லை?

ஓடிஐ, டெஸ்டில் சிறப்பாக விளையாடி இரண்டு ஐசிசி கோப்பைகளையும், அனைத்து இருதரப்பு கோப்பைகளையும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வைத்துள்ளது. ஐபிஎல் தொடரிலும் கூட தடுமாறி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார். இப்படி பல சாதனைகளை பாட் கம்மின்ஸ் செய்திருந்தாலும், களத்தில் அவரது துணிச்சலான முடிவுகள், தனித்துவமான சிந்தனை, வீரர்களிடம் அவரது அணுகுமுறையும் பலரையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | VIRAT KOHLI: தொடர்ந்து தடுமாறும் கோலி.. கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தற்போது மீண்டும் இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன்ஷிப் கோப்பை கைப்பற்றுமா அல்லது இந்த முறை இரண்டாம் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கு முன் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்னும் விளையாட இருக்கிறது. இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய கேப்டன் யார்?

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது கணுக்காலில் ஸ்கேன் செய்யப்பட உள்ளது. அதற்கு பிறகே பாட் கம்மின்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார் மாட்டாரா என்பது உறுதியாகும். மேலும், ஆஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவரான ஜார்ஜ் பெய்லியும், பாட் கம்மின்ஸ் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  தொடரில் கலந்து கொள்வாரா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.

இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பாட் கம்மின்ஸ் கேப்டன்ஸி பொறுப்பு ஜோஷ் இங்லிஸிடம் கைமாற்றப்படலாம். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாட் கம்மின்ஸ் பங்கேற்காத போது அவர்தான் கேப்டன்ஸியை பொறுப்பை பெற்றார். இருப்பினும் இது ஐசிசி தொடர் என்பதால் சீனியர்கள் யாரிடமாவது இந்த பொறுப்பை ஒப்படைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும்.

தற்போது ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடிவிட்டு அங்கிருந்து நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும். இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் பாட் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. பாட் கம்மின்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் அவர் தற்போது இந்த தொடரில் இருந்து விடுப்பை எடுத்துள்ளார். 

மேலும் படிக்க | நம்பர் 3 இடத்தை தியாகம் செய்வாரா விராட் கோலி...? இந்திய அணிக்கு இதில் என்ன நன்மை?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News