Shakib AL Hasan: நடப்பு உலகக் கோப்பை தொடரில் காயம் என்பது ஒரு தொடர் கதையாக இருந்து வந்துள்ளது. பல அணிகளில் முன்னணி வீரர்கள் அணி அறிவிப்பு முன்னரே காயம் காரணமாக உலகக் கோப்பையை தவறவிட்ட நிலையில், ஸ்குவாட் அறிவித்த பின்னரும் கூட சில வீரர்கள் தொடரில் இருந்து விலக நேரிட்டது. இந்திய அணியை எடுத்துக்கொண்டால் அக்சர் படேல் ஸ்குவாட் அறிவிப்புக்கு பின் ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் காயம் ஏற்பட்டது.
அதன்பின் அக்சர் படேலுக்கு பதில் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார். உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா தற்போது மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில் மட்டுமின்றி இலங்கையில் கேப்டன் ஷனகா, பதிரானா, லஹிரு குமாரா உள்ளிட்டோர் காயம் காரணமாக அவதிப்பட்டனர்.
நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், டிம் சவுதி உள்ளிட்டோரும் காயம் காரணமாக அவதிப்பட்டனர். தற்போது அவர்கள் அணியில் இணைந்துவிட்டாலும் மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன் போன்றோரும் தற்போது காயத்தில் சிக்கி உள்ளனர். ஹென்றிக்கு பதில் ஜேமீசன் அணியில் இணைந்துள்ளார். அனைத்து அணிகளிலும் காயம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, அடுத்த உலகக் கோப்பை 17, 18 வீரர்கள் அடங்கிய ஸ்குவாடை கொண்டு வர ஐசிசி அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த வகையில், வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் கடைசி லீக் போட்டியில் இருந்து விலகி இன்று நாடு திரும்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசனின் காயம் குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் பிசியோ பயாஜெதுல் இஸ்லாம் கான், "ஷாகிப்பின் இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. டெல்லியில் நேற்று இலங்கைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஷகிப் அல் ஹசனுக்கு அவசரமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஷாகிப் அல் ஹசனின் இடது கை விரலின் PIP ஜாய்ண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதை எக்ஸ்ரே உறுதி செய்தது. ஷகிப் அல் ஹசன் குணமடைய மூன்று - நான்கு வாரங்கள் ஆகலாம். ஷாகிப் அல் ஹசன் சிகிச்சைக்காக இன்று வங்கதேசம் செல்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 82 ரன்களையும் அடித்து மிரட்டினார். வங்கதேச அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி பெற்றுள்ளது. கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வரும் நவ. 11ஆம் தேதி புனே மைதானத்தில் வங்கதேசம் மோதுகிறது. நேற்றைய போட்டியில், மேத்யூஸை Timed Out முறையில் வெளியேற்றிய பின் ஷகிப் அல் ஹாசன் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தது கிரிக்கெட் உலகில் சர்ச்சையானது. ஷகிப் அல் ஹாசன் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IND vs AUS: ரோஹித், கோலி, கில் நீக்கம்! ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இந்திய அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ