'இவர் தான் ரொம்ப டேஞ்சர்...' விராட் கோலியே பயப்படும் அந்த பங்களாதேஷ் வீரர் யாருப்பா?

IND vs BAN: உலகக் கோப்பையில் சிறிய அணி என்று எதுவுமே கிடையாது என்றும் வங்கதேச அணியில் இவர் ஆபாயமான வீரர் என்றும் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 06:44 PM IST
  • இந்தியா - வங்கதேச அணிகள் நாளை மோதுகின்றன.
  • புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • விராட் கோலியை ஷகிப் 5 முறை அவுட்டாக்கியுள்ளார்.
'இவர் தான் ரொம்ப டேஞ்சர்...' விராட் கோலியே பயப்படும் அந்த பங்களாதேஷ் வீரர் யாருப்பா? title=

ICC World Cup 2023, IND vs BAN: உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா என முக்கிய போட்டிகளை போன்று இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியும் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியை அதிர்ச்சி தோல்விக்கு உள்ளாக்கியது, வங்கதேச அணி.

வங்கதேசம் வெல்லுமா?

வங்கதேசத்திடம் அடைந்த தோல்வியால் இந்திய அணி அந்த தொடரில் இருந்தே வெளியேறியது. அப்போது இருந்து வங்கதேசம் என்றாலே இந்தியா மிக கவனமுடன் கையாளும். 2022ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 4 ஓடிஐ போட்டிகளை இந்தியா - வங்கதேசம் (IND vs BAN) அணிகள் விளையாடி உள்ளன. அதில் இந்தியா 1 போட்டியிலும், வங்கதேசம் 3 போட்டியிலும் வென்றுள்ளது. 

மேலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் டாப் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்தது போன்று வங்கதேசம் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு அதிர்ச்சியை தருமா என்றும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அந்த வகையில், வங்கதேச போட்டியையொட்டி, விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தெரிவித்த கருத்தை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | IND vs BAN: முகமது ஷமி வங்கதேச போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

அச்சுறுத்தும் பௌலர்

விராட் கோலி (Virat Kohli) கூறியதாவது,"வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக இந்திய அணி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு (ஷாகிப் அல் ஹசன்) எதிராக நான் நிறைய விளையாடி இருக்கிறேன். ஷாகிப் அல் ஹசன் அற்புதமான கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். புதிய பந்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் பேட்ஸ்மேனை வலையில் சிக்கவைப்பதில் வல்லவர் மற்றும் மிகவும் ரன்களை சிக்கனமாக கொடுப்பவர்.

உலகக் கோப்பையில் பெரிய அணிகள் என்று எதுவும் இல்லை. வெற்றிகரமான அணிகளில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சும். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது என்பதை மறக்க கூடாது" என்றார்.

5 முறை அவுட்டாக்கிய ஷகிப்

விராட் கோலியின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஹர்திக் பாண்டியா,"இதுபோன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் இதைச் செய்யத் தவறினால், இந்த பந்துவீச்சாளர்கள் உங்கள் மீது அழுத்தம் கொடுப்பார்கள், மேலும் அவுட்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்றார்.

அதேபோன்று ஷகிப் அல் ஹாசன் (Shakib Al-Hasan) விராட் குறித்து கூறுகையில்,"தற்போதைய காலகட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி. அவர் ஒரு சிறப்பான பேட்டர். ஐந்து முறை அவரை வெளியேற்றியது எனது அதிர்ஷ்டம். வெளிப்படையாக, கோலியின் விக்கெட்டைப் பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார். 

மேலும் படிக்க | ஷகீன் அப்ரிடிக்கு இன்னொரு பேரிடி..! பாகிஸ்தான் கிளம்புகிறார்? இதுதான் விஷயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News