SRH vs CSK Playing XI Changes: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் (IPL 2024) தற்போது பெரும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நாட்டின் 13 நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இன்று வரை 17 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஹைதராபாத் நகரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது.
SRH & CSK: இதுவரை....
இதுவரை இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகளில் மோதி உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி சென்னை சேப்பாக்கத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வென்றது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இன்று பஞ்சாப் உடனான போட்டியில் குஜராத் (GT vs PBKS) வெல்லும்பட்சத்தில் சென்னை அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்படும்.
மறுபுறம் புதிய கேப்டன்ஸியில் கீழ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad) பலம் வாய்ந்த அணியாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதே ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் 277 ரன்களை குவித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்து, அந்த போட்டியையும் வென்றது. இருப்பினும், அதற்கு முன் ஈடன் கார்டனில் கொல்கத்தாவிடமும், மும்பை போட்டிக்கு பின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடமும் தோல்வியடைந்து வெறும் 2 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. இன்று குஜராத் உடனான போட்டியில் பஞ்சாப் வெல்லும்பட்சத்தில் ஹைதராபாத் 7ஆவது இடத்திற்கு தள்ளப்படலாம்.
சிஎஸ்கேவில் ஒரே ஒரு மாற்றம்
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக இருந்தலாலும் காம்பினேஷன்களை தேர்வு செய்வதில்தான் பெரும் குழப்பம் இருக்கும். குழப்பம் ஒருபுறம் இருக்க, சரியான காம்பினேஷன் அமைந்தாலும் அது போட்டியில் சரியாக வரும் வாய்ப்பும் குறைவுதான். சென்னை அணி நல்ல காம்பினேஷனில் விளையாடி வந்தது. தற்போது முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) நாளைய போட்டியில் மட்டும் விளையாட மாட்டார் என தெரிகிறது. எனவே அவருக்கு பதில் வேகப்பந்துவீச்சில் முகேஷ் சௌத்ரி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரை கொண்டு வருவார்களா அல்லது ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய தீக்ஷனாவை மீண்டும் கொண்டுவருவார்களா என்பது கேள்விக்குறிதான்.
சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சில் தீபக் சஹார், பதிரானா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இருந்தாலும் டேரில் மிட்செலும் உள்ளார். எனவே, நான்காவது வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்றபட்சத்தில் முகேஷ் சௌத்ரி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரை பயன்படுத்திக்கொண்டு Impact Player ஆக மொயின் அலி அல்லது சான்ட்னரை பயன்படுத்திக்கொள்ளலாம். பேட்டிங் வரிசையில் எவ்வித பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு பதில் மட்டும் சிஎஸ்கே யாரை யோசித்து வைத்திருக்கிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை அளித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் முக்கிய மாற்றங்கள்
மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பிளேயிங் லெவனில் சிறு மாற்றத்தை கொண்டுவரலாம். மயங்க் அகர்வால் கடந்த சில போட்டிகளாகவே சொதப்பி வரும் சூழலில், அவருக்கு பதில் அபிஷேக் சர்மா ஓப்பனிங்கில் இறங்கி, டிராவிஸ் ஹெட்டுடன் அதிரடியாக விளையாட தொடங்கலாம். அதே நேரத்தில், ஒன்டவுணில் மீண்டும் ராகுல் திரிபாதியை ஹைதராபாத் அணி நிர்வாகம் முயற்சித்து பார்க்கலாம்.
அதேபோல் பந்துவீச்சில் அந்த அணி கடுமையாக சொதப்பி வருகிறது. எனவே, மீண்டும் நடராஜனை (Natarajan) பாட் கம்மின்ஸ் நாளை கொண்டு வருவார் என தெரிகிறது. நடராஜன் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இன்று ஈடுபட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கலாம் என தெரிகிறது. அதன்படி, நடராஜன் நாளை வரும்பட்சத்தில் டெத் ஓவர்களில் வைட் யார்க்கர்கள் முதல் பல வேரியேஷன்களை வீசி சிஎஸ்கேவை திணறடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ