ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் அக்டோபர் 23ம் தேதியன்று தொடங்குகிறது. இதற்காக இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகள் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் போட்டியில் (T20 World Cup 2021) இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நீண்ட காலத்திற்கு பிறகு நடைபெறுவதால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாக உள்ளது. அக்டோபர் 24 அன்று இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ALSO READ | IND vs AUS Warm up Match: யாருக்கு எந்த இடம்? பேட்டிங் ஆர்டர் முடிவு செய்யப்படும்
அதன்படி நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்துடன் போட்டி போட்டு வென்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
பயிற்சி போட்டிகளை வைத்துதான் இந்திய அணி ப்ளேயிங் 11 தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் பயிற்சி போட்டியில் தான் புதிய குழப்பமே ஏற்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் பவுலிங் சொதப்பியது. புவனேஷ்வர் குமாரின் ஃபார்ம் சற்று தடுமாற்றமாக காணப்பட்டது. 4 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார் எதிரணிக்கு மொத்தம் 54 ரன்களை வழங்கினார். பதிலுக்கு ஒரு விக்கெட்டை கூட அவர் எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது புவனேஷ்வர் குமார் ப்ளேயிங் 11 போட்டியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என பலர் தெரிவித்து வருகின்றனர். மேலும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்துகள் வெளியாகி வருகிறது.
ஷர்துல் தாக்கூர் ஐபிஎலில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்துல் தாக்கூரின் எகானமி ரேட் அதிகமாகும். அவர் எந்த அளவிற்கு முக்கிய விக்கெட்களை எடுத்தாலும், ரன்களை வாரி வழங்கிவிடுகிறார். இது பின்னடவை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் கேப்டன் கோலியிடம் இருந்து வருகிறது. இதுவே புவனேஷ்வர் குமார் என்றால், அதிக அனுபவம் உடையவர், முதல் சில ஓவர்களில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் இறுதியில் கட்டுப்படுத்திவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை தோனியின் தனிப்பட்ட ஆலோசனைக்கு பிறகு ஷர்துல் விளையாடினால், சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.
ALSO READ | நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR