இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் போட்டிகளில் அந்த அணிக்கு தூணாக விளங்கிய அவர், ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டர்ஹாமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியுடன், இந்த வடிவத்தில் இருந்து விடை பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, இந்த வடிவத்தில் என்னுடைய கடைசி போட்டி. கடினமான முடிவு என எனக்கு தெரியும். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு?
டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடுவேன். இங்கிலாந்து அணிக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. இந்த அனுபவம் மற்றும் நினைவுகள் எப்போதும் என்னுடைய வாழ்க்கை முழுவதும் நீங்காமல் இருக்கும். இங்கிலாந்து ரசிகர்கள் இவ்வளவு நாள் கொடுத்த அன்பு மறக்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை உலகிலேயே சிறந்த கிரிக்கெட் ரசிகர்கள். உங்களுக்காக இன்னும் ஒரே ஒரு போட்டியில் நாளை விளையாட இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. என்னுடைய சொந்த மைதானமான டர்ஹாமில் விளையாடிய பிறகு விடை பெற இருக்கிறேன். நிச்சயம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, தொடரில் அணி முன்னணி பெறும் நிலையில் விடைபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
— Ben Stokes (@benstokes38) July 18, 2022
இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி. இதுவரை எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெகு சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்திருக்கிறது. அந்த சாதனைகள் எதிர்காலத்திலும் தொடரும். அது பிரகாசமாக தெரிகிறது" என உருக்கமாக தெரிவித்துள்ளார். பென்ஸ்டோக்ஸின் இந்த முடிவு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதேநேத்தில் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து அணியினரும் தயாராக உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெறும் பென் ஸ்டோக்ஸூக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Thank you, @benstokes38 from ODI - the knock in 2019 World Cup final will be remembered forever. pic.twitter.com/3l5kyIcfd5
— Johns. (@CricCrazyJohns) July 18, 2022
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதற்கு பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டமே காரணம். நியூசிலாந்து அணிக்கு எதிராக தனி ஒருவராக போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அன்றுமுதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை நாயகன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
மேலும் படிக்க | விமர்சனம் செய்தவர்களுக்கு கிங் கோலி கொடுத்த பதிலடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR