முடிந்தது மேற்கிந்திய தீவுகள் தொடர்! மீண்டும் குழப்பத்தில் பிசிசிஐ!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 8, 2022, 10:48 AM IST
  • ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர் வெற்றி.
  • அடுத்து ஆசிய கோப்பை 2022-ல் விளையாட உள்ளது.
  • டி20 உலக கோப்பைகான அணியை உருவாக்க பிசிசிஐ கடும் முயற்சி.
முடிந்தது மேற்கிந்திய தீவுகள் தொடர்! மீண்டும் குழப்பத்தில் பிசிசிஐ! title=

மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 -0 என ஒரு நாள் தொடரையும், 4- 1 என்று டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அனைவருமே தங்களது திறமையை நிரூபித்து காட்டியுள்ளனர்.  5வது டி20 போட்டியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார்.  இந்த போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் ஓப்பனிங் வீரர்களாக சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட்டை களம் இறக்கி பார்த்தது பிசிசிஐ. 3 மற்றும் 4வது டி20 போட்டிகளில் ஓப்பனிங் வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா மற்றும் சூரிய குமார் கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்த்தது. பவர்பிளே முடிவதற்குள் 50 ரன்கள் அடித்து பெரிய இலக்கை எட்ட உதவியது.  தனது சிறப்பான பேட்டிங் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் சூரியகுமார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் படிக்க | சூர்யகுமார், பந்த், இஷான் கிஷன் வேண்டாம்! இவர் தான் சரி - முன்னாள் வீரர் கருத்து!

டி20 உலக கோப்பைக்கு சிறந்த அணியை தேர்வு செய்ய பிசிசிஐ அனைத்து வீரர்களுக்கும் தற்போது வாய்ப்பு அளித்து வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை அணியில் எடுக்கலாம் என்று திட்டமிட்டது. இளம் வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களது திறமையை நிரூபித்துக் காட்டி வருகின்றனர். கேஎல் ராகுலுக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட தீபக் ஹூடா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மறுபடியும் அக்சர் படேல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தன்னை நிரூபித்துள்ளார்.  

பவுலிங்கில் ஆவேஸ் கான், ஹர்தீப் சிங் போன்றோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.  சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பினால் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது.  இதனால் ஆசிய கோப்பை மற்றும் டி20 தொடரில் எந்த வீரர்களை தேர்வு செய்வது என்று பிசிசிஐ திணறி வருகிறது.  இருப்பினும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களே டி20 உலக கோப்பை காண இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க | CWG 2022: ஆஸ்திரேலியாவிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News