புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) நிறைவு விழாவை நடத்த ஆர்வமுள்ள நிறுவனங்களிடம் இருந்து பிசிசிஐ டெண்டர்களை கோரியுள்ளது.
நிறைவு விழாவை நடத்துவதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFP) வெளியிடுவதாக இந்தீய கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை .அறிவித்தது.
BCCI announces release of Request for Proposal for Staging the Closing Ceremony of IPL 2022. #TATAIPL
More Details https://t.co/COqBqByttl
— BCCI (@BCCI) April 16, 2022
டெண்டர் செயல்முறையின் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தகுதித் தேவைகள், ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறை, உரிமைகள் மற்றும் கடமைகள் போன்றவை. RFPயில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், போட்டியை நடத்துவதற்கான செலவுகள், ஏலத்தொகை தொடர்பாக பொருந்தும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான தகவல்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த RFP (Request for Proposal) விண்ணப்பத்தை ஏப்ரல் 25 வரை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
"ஏலத்தை சமர்ப்பிக்க விரும்பும் எந்தவொரு ஆர்வமுள்ள அமைப்போ, நிறுவனமோ RFP ஐ வாங்க வேண்டும்" என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | IPL 2022 மைதானத்தில் ரசிகர்களை ஏமாற்றிய ரோஹித் சர்மா!
"இருப்பினும், RFPயில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஏலத்திற்கு தகுதியுடையவர்கள்."
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 29ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR