புதுடெல்லி: பிப்ரவரி 5 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறதும். இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்களை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து: இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான டீம் இந்தியாவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது உறுதியாகியிருக்கிறது. முதல் முறையாக அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur
— BCCI (@BCCI) January 19, 2021
ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியதற்காக அவருக்கு இந்த சிறப்புப் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நன்றாக விளையாடியதற்கான பரிசையும் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு (England) எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுந்தர் தனது முதல் டெஸ்டில் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் அற்புதமாக செயல்பட்டார். அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார், அற்புதமான 84 ரன்களையும் கொடுத்தார்.
Also Read | BCCI: ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணிக்கு ₹5 கோடி Bonus
இது தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜுக்கும் இங்கிலாந்துக்கு எதிரான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கங்காருவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிராஜ் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இஷாந்த் சர்மா அணிக்கு திரும்பினார்
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அவர் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
The Committee also picked five net bowlers and five players as standbys.
Net Bowlers: Ankit Rajpoot, Avesh Khan, Sandeep Warrier, Krishnappa Gowtham, Saurabh Kumar
Standby players: K S Bharat, Abhimanyu Easwaran, Shahbaz Nadeem, Rahul Chahar, Priyank Panchal#INDvENG
— BCCI (@BCCI) January 19, 2021
இவர்களைத் தவிர, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர் என வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆர் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Also Read | பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
ஹார்டிக் பாண்ட்யா 29 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்புகிறார். ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யாவும் (Hardik Pandya) இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2018 ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு இப்போது தான் இந்திய டெஸ்ட் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார். ஹர்திக் இந்திய பிட்ச்களில் மிகவும் பயனுள்ள முறையில் செயல்படுபவர் என்பது கூடுதல் சிறப்பு. டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு சதத்துடன் 532 ரன்கள் எடுத்துள்ளார், மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Also Read | IPL Auction 2021: இந்த விதிகளின் கீழ் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம்
பிருத்வி ஷா மற்றும் டி நடராஜன் அணியில் இடம் பெறவில்லை
ஆஸ்திரேலியாவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இது தவிர, வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜனும் இந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தனது முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன்.
இது தவிர, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜெட்ஜா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி ஆகியோரும் காயம் காரணமாக இந்த அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும், தற்போது அணியில் இடம் பெறாதவர்கள் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்கப்படலாம்.
Also Read | IND vs Aus: Brisbane டெஸ்டில் இந்தியா அபார வெற்றி, ஆஸ்திரேலியாவில் அமர்க்களம்!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR