India vs Bangladesh ODI Series: நியூசிலாந்து தொடரை முடித்த இந்திய அணி, இப்போது வங்கதேச சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. உலக கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்ட கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இந்தியா - வங்கதேசம் அணிகள் முதலாவதாக ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 4ஆம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியை சீண்டும் விதமாக வங்கதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் பேசியுள்ளார். அவர் பேசும்போது, இந்திய அணியில் பார்ப்பதற்கு பெரிய பெயர்கள் இருந்தாலும், அவர்களை தோற்கடிக்கும் வலிமை வங்கதேச அணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
அக்ரம் கான் பேசும்போது, " இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி என பார்ப்பதற்கு மிகப்பெரிய பெயர்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களை வீழ்த்தும் வல்லமை வங்கதேச அணியிடம் இருக்கிறது. எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் இந்தமுறையும் வங்கதேச அணியின் செயல்பாடு இருக்கும்" என தெரிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் சங்க இயக்குநரின் இந்த பேச்சு இந்திய அணியை உசுப்பேற்றியுள்ளது.
மேலும் படிக்க | ரோகித், விராட் கோலிக்கு சலுகை எதற்கு? சரமாரியாக விளாசிய கவாஸ்கர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ