AUS vs IND 3rd Test: இந்திய வீரர்கள் மீது மீண்டும் இனரீதியான துஷ்பிரயோகம்?

AUS vs IND: இந்திய வீரர்கள் மீது மீண்டும் இனரீதியான துஷ்பிரயோகம்  நடைபெறுவதாக வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2021, 04:07 PM IST
  • ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி
  • பிற அணிகளை அவமதிப்பதில் பெயர் பெற்றவர்கள் ஆஸ்திரேலியர்கள்
  • விளையாட்டின்போது அவமதித்த குற்றச்சாட்டு ஆஸ்திரேலியாவுக்கு புதிதல்ல
AUS vs IND 3rd Test: இந்திய வீரர்கள் மீது மீண்டும் இனரீதியான துஷ்பிரயோகம்? title=

புதுடெல்லி: AUS vs IND: இந்திய வீரர்கள் மீது மீண்டும் இனரீதியான துஷ்பிரயோகம்  நடைபெறுவதாக வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

சிராஜின் புகாருக்குப் பிறகு ஆஸ்திரேலிய (Australia) அணிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்திய அணியை இனரீதியில் அவமதிக்கும் ரசிகர்கள் குழுவை வெளியேறுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

இந்திய அணியின் மொகம்மத் சிராஜ் (Mohammed Siraj) கிரிக்கெட் மைதானத்தின் பவுண்டரியின் அருகில் இருந்தபோது அவரை ஆஸ்திரேலிய ரசிகர்கள் வார்த்தைகளால் அவமதித்தனர். இது குறித்து போட்டியின் அம்பயர்கள் (Umpire) இருவரும் சிராஜ் உடன் பேசினார்கள்.

எந்த இடத்தில் இருந்து அவதூறு வார்த்தைகள் வந்தன என்பதை சிராஜ்   சுட்டிக்காட்டினார். அங்கு சென்ற காவல்துறையினர் (Police) அவதூறு பேசியவர்களை விரைவில் அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த  ஒரு தம்பதியினரும் வெளியேற வேண்டுமென்று போலீசார் அறிவுறுத்தினார்கள்.

Also Read | IND vs Aus: நான்காவது டெஸ்ட் போட்டி நடப்பதில் சந்தேகம், Brisbane-ல் மீண்டும் லாக்டௌன்!!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதான அவதூறு குறித்து ஆர் அஸ்வின் வருத்தம் தெரிவித்தார்.

சிட்னியில் கடந்த காலத்தில் எங்களுக்கு சில மோசமான அனுபவங்கள் ஏற்பட்டன. சிலர் எங்களை அவமதித்தார்கள். பல முறை பொறுத்துக் கொண்டோம். ஆனால் இந்த முறை புகார் அளித்துள்ளோம். இந்த நாளிலும், சூழ்நிலையிலும் இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இந்த பிரச்சனை இரும்பு கரங்களால் அடக்கப்பட  வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெர்றுவருகிறது. 2வது இன்னிங்சின் 4ம் நாள் ஆட்ட இறுதியில் இந்தியா 98/2 ரன்கள் என்ற நிலையில் உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் களம் இறங்கிய இந்திய அணி 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 220 ரன்கள் எடுத்துள்ளது. 2வது இன்னிங்சில் மட்டை வீசி வரும் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்குத 98 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை.

Also Read | ‘நடராஜனின் அற்புத கதை உத்வேகம் அளிக்கிறது’
 
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News