ஆசிய கோப்பை 2022 போட்டிகள் ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கியது. முதல் போட்டியிலேயே டிஆர்எஸ் சர்ச்சை தற்போது ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். போட்டியின் முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் பாரூக்கி வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது. முதல் ஓவரிலேயே விக்கெட்கள் விழுந்ததால் அதிர்ச்சியில் இருந்த இலங்கை அணிக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
இரண்டாவது ஓவரின் இறுதி பந்தில் பாத்தும் நிஸ்ஸங்க நவீன் உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இருப்பினும், நிஸ்ஸங்க மூன்றாவது நடுவரிடம் முறையிட்டார். ரீப்ளேயில் ஒரு நூல் அளவிற்கும் சிறிதான ஸ்பார்க் இருப்பது போல் காட்டியது. இது அவுட்டா? நாட் அவுட்டா? என்ற சந்தேகத்தில் அனைவரும் இருக்க மூன்றாவது நடுவர் அவுட் என்று முடிவு செய்தார். இது இலங்கை பயிற்சியாளர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நடுவரின் இந்த முடிவு ட்விட்டரிலும் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
Never saw any spike on the ultra edge re Pathum Nissanka's review. Horrible decision by the 3rd Umpire Jayaraman.
— Roshan Abeysinghe (@RoshanCricket) August 27, 2022
Would be interested to see what the explanation for that Nissanka decision is. No way you can say ultra edge gave any evidence to suggest there was a nick. #AsiaCup #SLvAFG
— Estelle Vasudevan (@Estelle_Vasude1) August 27, 2022
மேலும் படிக்க | இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி?
"பாதும் நிஸ்ஸங்கவின் பேட்டில் எந்த ஒரு ஸ்பைக் இல்லை. இது 3வது நடுவர் ஜெயராமனின் கொடூரமான முடிவு" என்று இலங்கை வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரோஷன் அபேசிங்க ட்வீட் செய்துள்ளார். "அல்ட்ரா எட்ஜ் ஒரு நிக் இருந்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று ஒரு ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை அணி அடுத்தது விக்கெட்களை இழந்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்பு ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவரில் 106 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | INDvsPAK: பிளேயிங் 11-ல் விளையாட போவது இவர்கள் தான்! சூசகமாக அறிவித்த பிசிசிஐ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ