இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளனர். ஐபிஎல் 2024 சீசனில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைத்து கொள்ளாமல் விடுவித்தது. ஏலத்தில் அவரை மீண்டும் எடுத்து கொள்ளலாம் என்று அவர்கள் திட்டம் வைத்திருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் அவரை மெகா ஏலத்தில் மீண்டும் எடுக்க முடியவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை தங்கள் அணியில் எடுத்துள்ளது. இதனால் கொல்கத்தா அணிக்கு தற்போது புதிய கேப்டன் தேவை.
மேலும் படிக்க | 27 கோடிக்கு ஏலம் போனாலும் ஐபிஎல்லில் அதிக சம்பளம் பெற போவது இவர் தான்!
யாரும் எதிர்பார்க்காத விதமாக மெகா ஏலத்தில் 23.5 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. இந்த ஆண்டு ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன 3வது வீரர் இவர் தான். எனவே கேப்டன் பொறுப்பு வெங்கடேஷ் ஐயருக்கு தான் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய பெயர் அடிபட்டுள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா அணியை அஜிங்க்யா ரஹானே வழிநடத்துவார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த ரஹானேவை ரூபாய் 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. ஒருவேளை கேப்டன்சி பொறுப்பிற்காகத்தான் ஏலத்தில் எடுத்தார்களா என்ற சந்தேகவும் எழுகிறது.
CAPTAIN AJINKYA RAHANE
Rahane emerged as the strong contender to lead KKR in IPL 2025. [Gaurav Gupta from TOI] pic.twitter.com/BSxQ3q1QHv
— Johns. (@CricCrazyJohns) December 2, 2024
மிகவும் அனுபவம் வாய்ந்த ரஹானே பல போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். குறிப்பாக இந்திய அணியையும் வழிநடத்தி உள்ளார். முழுநேர கேப்டன்கள் இல்லாத சமயத்தில் இந்திய அணியை வழிநடத்திய வெற்றியும் பெற்றுள்ளார். ரஹானே தற்போது மும்பையின் ரஞ்சி கோப்பை அணியின் கேப்டனாக உள்ளார். இதற்கு முன்பு ஐபிஎல்லில் 2018 மற்றும் 2019 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். கேப்டன்சிக்கான வீரர்களை கேகேஆர் அணி ஏலத்தில் எடுக்க தவறி உள்ளதால் ரஹானேவை கேப்டனாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025க்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
ரின்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பினிஷ் மார்கண்டே, ரோவ்மன் ஜான் பவல் சிசோடியா, அஜிங்க்யா ரஹானே, அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக்
மேலும் படிக்க | சிஎஸ்கே, மும்பை இல்லை! பலமான பேட்டிங் ஆர்டர் வைத்திருப்பது இந்த 3 அணிகள் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ