ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் 2020 போட்டித்தொடர் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. வீரர்கள், கிரிக்கெட், புதிய சாதனை, கொரோனா தொற்றுக்கு மத்தியில் பார்வையாளர்கள் இல்லாத அரங்கில் விளையாட்டு, நேரலையில் ரசிகர்கள் பார்க்கலாம் என பல்வேறு புதிய பரிணாமங்களை கொண்ட இந்த ஆண்டின் ஐ.பி.எல் போட்டித்தொடர் வித்தியாசமாக இருக்கிறது.
எத்தனை வித்தியாசங்களும் புதுமைகளும் ஏற்பட்டாலும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான AB de Villiersஇன் புதிய அவதாரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
இனவெறிக்கு எதிரான போராட்டம் கிரிக்கெட் களத்தில் வேகத்தை அதிகரிக்கும் நிலையில், 'Barefoot Circle' மற்றும் 'Taking the Knee', என்பது போன்ற சைகைகளைப் பயன்படுத்துகின்றனர். ஏபி டிவில்லியர்ஸ் தனது எண்ணத்தை புது அவதாரம் மூலம் வெளிக்காட்டுகிறார். ஆம், அவர் விளையாட்டு வீரர் என்பதில் இருந்து பாடல் எழுதி அதனை பாடி வெளியிட்டிருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிக்காக விளையாடும் டிவில்லியர்ஸ், "நாங்கள் நெருப்புத் தடத்தில் ஓடும்போது சுடரைக் காண்கிறோம் ..." ("As we run through the fire we find the flame...") என்று தனது பாடலின் விளம்பரத்தை இன்ஸ்டாகிராமில் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டார்.
Wrote this song with @karenzoid & the @ChoirAfrica . We’re all so different, but united we form the perfect picture!
Thanks @imVkohli @DaleSteyn62 @Tipo_Morris @KagisoRabada25 @yuzi_chahal & @AnrichNortje02 for leaving your comfort zones with me. https://t.co/WJj0DxNyMW
— AB de Villiers (@ABdeVilliers17) October 30, 2020
மனித குல ஒற்றுமைக்கான இந்த பாடல் ஒற்றுமைக்கான நம்பிக்கையை விதைப்பதாக இருக்கிறது. இந்தப் பாடலை எழுதி பாடியிருக்க்கும் ஏபி டிவில்லியர்சுடன், தென்னாப்பிரிக்க ராக் பாடகர் கரேன் சோயிட் மற்றும் என்ட்லோவ் யூத் கொயர் இணைந்திருக்கின்றனர். "ஒன்றாக ஒன்றிணைந்தது, நாங்கள் சண்டையை எதிர்கொள்வோம்", என்றும்` "கையில் கைகோர்த்து தலைகீழாக" போன்ற வரிகளுடன் இன சமத்துவத்தின் செய்தியைக் கொண்டுள்ளது. , நாங்கள் தண்ணீரைப் போல பாய்கிறோம், மணலைப் போல பாய்கிறோம் ".
"இந்த பாடல் @karen_zoid மற்றும் chchoirafrica உடன் இணைந்து எழுதப்பட்டது. இது, நம்பிக்கைக்கான பாடல், நம்பிக்கையின் பாடல். நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்." என்று டிவில்லியர்ஸ், இந்த promoவுடன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
முழு பாடலையும் ட்வீட் செய்துள்ள டிவில்லியர்ஸ், "நாங்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறோம், ஆனால் ஒன்றுபட்டு நாங்கள் சரியான நிலைப்பாட்டை உருவாக்குகிறோம்!" என்று எழுதியுள்ளார்.
இந்த வீடியோவில் ஆர்.சி.பி கேப்டன் விராட் கோஹ்லி, தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் டேல் ஸ்டெய்ன், காகிசோ ரபாடா, கிறிஸ் மோரிஸ் மற்றும் அவரது மகனும் இடம் பெற்றிருக்கின்றனர்..
தொடர்புடைய செய்தி | Video Call மூலம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மந்தீப் சிங் @IPL 2020
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR