இன்று இந்தியா, ஜிம்பாப்வே மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி:

Last Updated : Jun 11, 2016, 12:34 PM IST
இன்று இந்தியா, ஜிம்பாப்வே மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: title=

மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே வந்ததுள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும். 

தற்போது நடைபெறவுள்ள போட்டிகளில் நிறைய புதியமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. முக்கிய வீரர்களான விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. இளம் வீரர்களை கேப்டன் டோணி எப்படி கையாளப்போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகும். இந்திய அணியில் அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, அக்ஷர் பட்டேல் என ஓரளவு அனுபவம் உள்ள வீரர்களும் இருக்கிறார்கள்.

வீரர்கள் விவரம்:-

இந்தியா: லோகேஷ் ராகுல், மன்தீப்சிங் அல்லது பாசல், மனிஷ் பாண்டே, அம்பத்தி ராயுடு, கருண் நாயர் அல்லது கேதர் ஜாதவ், டோனி (கேப்டன்), அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, பரிந்தர் ஸ்ரன், தவால் குல்கர்னி, யுஸ்வேந்திர சாஹல்.

ஜிம்பாப்வே: சிபாபா, ஹாமில்டன் மசகட்சா, சிகந்தர் ராசா, முதும்பாமி, கிரேக் எர்வின், சீன் வில்லியம்சன், கிரேமி கிரீமர் (கேப்டன்), நெவில்லே மாட்ஸிவா, சதரா, வெலிங்டன் மசகட்சா அல்லது திரிபனோ அல்லது டிமிசென் மருமா.

Trending News